புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த இவர் பள்ளிக்கல்வி மட்டுமே முடித்தவர். சங்கராபரணி (2001), நீரின்றி அமையாது உலகு (2003), நீலி (2005), எனது மதுக்குடுவை (2011), முள் கம்பிகளால் கூடு பின்னும் பறவை (2017), கடல் ஒரு நீலச்சொல் (2019) இவரது கவிதைத் தொகுப்புகள். விடுதலையை எழுதுதல் (2004), நம் தந்தையரைக் கொல்வதெப்படி (2009), வெட்டவெளி சிறை (2014), மர்லின் மன்றோக்கள் (2021) கட்டுரைத் தொகுப்புகளின்
ஆசிரியர். பறத்தல் அதன் சுதந்திரம் (2001), அணங்கு (2004) கட்டுரை நூல்களின் தொகுப்பாசிரியர். மாலதி மைத்ரியின் படைப்புகள் ஆங்கிலம், மலையாளம், இந்தி, கன்னடம், கலீசியன், பிரெஞ்ச் மற்றும் ஜெர்மன் மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. சிறந்த கவிதைத் தொகுப்பிற்கான திருப்பூர் தமிழ்ச்சங்க விருதும், புதுவை அரசின் கம்பன் புகழ் விருதும் பெற்றுள்ளார்.
‘அணங்கு’ தமிழின் முதல் பெண்ணிய இதழ், முதல் பெண்ணியப்
பதிப்பகத்தை உருவாக்கியவர். ஈழப்போரை நிறுத்த படைப்பாளிகளைத் திரட்டி தலைநகர் டெல்லி முற்றுகை போராட்டம், கூடங்குளம் அணுவுலைகளை மூட டெல்லி, தமிழ்நாடு, புதுச்சேரியில் போராட்டங்களை முன்னெடுத்தவர். பெண்ணியரசியல், சூழலரசியல், ஒடுக்கப்பட்டோருக்கான விடுதலை அரசியல், சமூகநீதி மற்றும் மனிதவுரிமைகள் களத்தில் இயங்கி வருபவர்.
1 product
Sale
Quick View