
சிவகங்கையில் பிறந்தவர். கட்டடப் பொறியியல் படித்தவர். ஹார்மோனியம் சிறுகதைக்காகக் கதா விருதும் 'தமிழ்ச் சிறுகதைகளில் காட்சிப் படிமங்கள்' என்னும் தலைப்பில் செய்த ஆய்வுக்காக மத்திய அரசின் இளநிலை ஆய்வு நல்கை (Junior Fellowship 2004-2006) பெற்றவர். திரைப்பட ஒளிப்பதிவாளர், 'டுலெட்' திரைப்படத்தின் இயக்குநர்.
ஒளிப்பதிவுக்காகச் சர்வதேச விருதுகளும் (BFI London, MIFF Italy) 'டுலெட்' படத்தின் இயக்கத்திற்காகத் தேசிய விருதும் (2018). இந்தியாவின் சிறந்த படம் (KIFF 2018) விருதுகளும் பெற்றவர். The Film School என்னும் திரைப்படப் பள்ளியை நிறுவித் தமிழில் சுதந்திர சினிமாவுக்கான முன்னெடுப்புகளை நடத்தியவர்.
சத்யஜித் ரேயின் முதல் மற்றும் கடைசித் திரைப்படங்களான 'பதேர் பாஞ்சாலி', 'அகாந்தக்' ஆகியவற்றைத் தமிழில் மொழிபெயர்த்தவர். 'வந்த நாள் முதல் (கவிதையும் நிழற்படங்களும்)'. 'உலக சினிமா'. 'பேசும்படம்', 'முகங்களின் திரைப்படம்'. 'ஒளியில் எழுதுதல்', 'டுலெட் திரைக்கதையும் உருவாக்கமும்', 'த மியூசிக் ஸ்கூல்' (மேற்கத்திய இசைக் குறிப்புகள் குறித்த பத்து நூல்கள்) ஆகிய நூல்களின் ஆசிரியர்.
2026, ஜூலை மாதம் மறைந்தார்.