சுல்தான் அகமது இஸ்மாயில்

    Filter

      டாக்டர் சுல்தான் இஸ்மாயில் (பிறப்பு: அக்டோபர் 9, 1951)
      தனது பள்ளிப் படிப்பினை பாண்டிச்சேரியிலுள்ள புனித ஜோசப்
      உயர்நிலைப் பள்ளியிலும், பட்டப் படிப்பையும் முதுகலைப் பட்டப்
      படிப்பையும் சென்னை புதுக்கல்லூரியிலும், பி.எச்.டி. பட்டப்
      படிப்பைச் சென்னை லயோலா கல்லூரியிலும் மேற்கொண்டவர்.
      2001ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகத்தில் உயர்பட்டமான
      D.Sc . பெற்றார். 1978ஆம் வருடம் முதல் அவர் மண்புழுக்களைக்
      குறித்த ஆய்வினை நடத்தி வருகிறார். அதுவரையில் அறிவியல்
      இதழ்களில் 65 அறிவியல் கட்டுரைகளையும், பல வெகுஜனக்
      கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளார். சென்னை பெருநகர் ரோட்டரி
      சங்கத்தின், 92 & 93 ஆம் ஆண்டிற்கான வோகேஷனல் சேவை
      விருது, எக்ஸ்னோரா நிறுவனத்தின் சுற்றுச்சூழல் நண்பன் விருது
      (1994), காமன் வெல்த் அசோஷியனின் அறிவியல், தொழில்நுட்பம்,
      கணிதம் ஆகிய துறைகளில் செயல்படும் கல்வியாளர்களுக்கான
      விருது (1995), ஆஸ்திரேலியாவின் சர்வதேச கல்வி நிறுவனத்தின்
      ஃபெலோஷிப் (1996) ஆகியவற்றைப் பெற்றவர். சூழலியல்
      கல்விக்காகவும் விழிப்புணர்வுக்காகவும் தமிழக அரசின் சூழலியல்
      துறையின் அறிஞர் அண்ணா விருதை 2005இல் பெற்றார். பெங்களூர்
      பல்கலைக்கழகம் மற்றும் தேசிய இயற்கை விவசாய வாரியம்
      மற்றும் தேசிய தோட்டக்கலைத்துறை மூன்றும் இணைந்து
      விவசாயத் துறைக்கான தலைமை விருதை வழங்கியன.
      டாக்டர் இஸ்மாயில் பலமுறை பயணங்கள் மேற்கொண்டு,
      மண்புழு வளர்ப்புக்கு உள்ளூர் புழுக்களையே பயன்படுத்துவதைப் பெரிதும் ஊக்குவித்து வருகிறார். சென்னையில் புதுக்கல்லூரியில்
      1974லிருந்து பணியாற்றிவருகிறார்.

      1 product