
கரூர் மாவட்டத்தின் ஆலமரத்துப்பட்டி என்கிற ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர். கரூர் மாவட்டத்தின் காவிரி ஆற்றங்கரையின் கரையோர ஊர்களான பழைய ஜெயங்கொண்ட சோழபுரத்திலும் கிருஷ்ணராயபுரத்திலும் தனது பள்ளிப் பிராயங்களைக் கழித்தவர். தற்போது சென்னையில் வசித்து வருகிறார்.
இதுவரை 'காலடித் தடங்கள்'. 'தேம்பூங்கட்டி'. 'நோமென் நெஞ்சே'. 'நானே செம்மறி நானே தேவன்' என நான்கு கவிதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு 'யாறு'.