
மருத்துவ உளவியல் பயின்றவர். தேனி அரசு மனநல மருத்துவ நிலையத்தில் உதவிப் பேராசிரியராக/கிளினிக்கல் சைக்காலஜிஸ்ட்டாகப் பணிபுரிகிறார். உளப்பகுப்பாய்வு, கலாசார ஆய்வுகள், திரைப்பட ஆய்வுகள், மானிடவியல் போன்றவைகளில் ஆர்வமுண்டு. கூத்துப் பட்டறையில் பணியாற்றியிருக்கிறார். எழுத்தாளர்கள் கோபிகிருஷ்ணன், லதா ராமகிருஷ்ணன் ஆகியோரோடு இணைந்து மனநலம் குறித்து விமர்சன பூர்வமான கட்டுரைகள் எழுதியுள்ளார். 1001 அரேபிய இரவுகள் கதைகளை (நான்கு தொகுதிகள்) மொழிபெயர்த்துள்ளார். கஜினி முகமதின் மருமகனான ஹாஜி மியான் என்பவரைக் குறித்து நாட்டார் வழக்காற்றியல் நோக்கில் ஒரு குறுநூல் எழுதியுள்ளார்.
மனநலத் துறை சம்பந்தப்பட்டு விமர்சனப் பூர்வமான மாற்று சிந்தனைப் பார்வைகள் கொண்ட (Critical Psychiatry) மனநோயின் மொழி என்ற புத்தகத்தின் ஆக்கத்தில் இவருக்குப் பங்குண்டு. புதிய ஈரானிய சினிமா என்ற நூலை தொகுத்துள்ளார்.