
கடந்த முப்பத்தைந்து ஆண்டுகளாக பெண்களது உரிமைக்கான போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். ஒரு பெண் வழக்கறிஞராக பெண்களுக்கு நிவாரணம் கிடைக்க தொடர்ந்து பாடுபடுபவர். சென்னை உயர்நீதிமன்ற பெண் வழக்கறிஞர் சங்கம், தமிழ்நாடு பெண் வழக்கறிஞர் சங்கம், அகில இந்திய பெண் வழக்கறிஞர் சங்கம் ஆகியவற்றின் தலைவராகவும் சர்வதேச பெண் வழக்கறிஞர் சங்கத்தின் துணைத் தலைவராகவும் பொறுப்பேற்று செயல்பட்டிருக்கிறார்.
இதுவரை மூன்று புத்தகங்களும் மூன்று சிறு பிரசுரங்களும் இரண்டு கவிதைத் தொகுப்புகளும் எழுதியுள்ளார்.