சென்னையை வசிப்பிடமாகக் கொண்டவர் கவிஞர் குட்டி ரேவதி. சித்த மருத்துவரான இவர் பாடலாசிரியர், பெண்ணிய ஆர்வலர், திரைப்பட இயக்குநர் மற்றும் மருத்துவர் என பன்முகங்களுடனும் சமகாலத்தில் எழுதிவரும் பெண் படைப்பாளிகளுள் கவனிக்கத்தக்க ஒருவராகவும் இயங்கிவருகிறார். கவித்துவமும் சிந்தனைத் தெளிவும் நிறைந்தவர். பெண்களுக்கான இலக்கிய காலாண்டு இதழான பணிக்குடம் என்ற முதல் தமிழ் பெண்ணிய இதழின் ஆசிரியராகவும் உள்ளார். இவ்விதழில் பெண்ணிலக்கியவாதிகளின் படைப்புகளே அதிகம் வெளியிடப்படுவது குறிப்பிடத்தக்கது. பல இலக்கிய சந்திப்புகள் மற்றும் சக மாணவர்களின் கவிதைத் தொகுப்புகளை மதிப்பாய்வு செய்தபின்னரே தனது சொந்த படைப்புகளில் சிலவற்றை குட்டி ரேவதி உருவாக்கத் தொடங்கினார்.
தலித் பெண்ணியம் என்பதை சித்தாந்த வடிவில் கட்டமைப்பதும் களப்பணிக்குச் செயல்படுத்துவதும் தான் இந்தியாவில் பெண்களின் உரிமைகளை முழுமையான வடிவில் பெற்றுத் தரும் என்று நம்புபவர்.
1 product
Sale
Quick View