
கா. ரபீக் ராஜா
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் 1986இல் பிறந்தார். அழகப்பா அரசு கலைக்கல்லூரியில் இளங்கலை வணிகப்பொருளியல் படிப்பை முடித்தார். மின்னிதழ்களிலும், சமூக வலைத்தளங்களிலும் எழுதி வருகிறார். இதுவரை இரண்டு நாவல்கள், மூன்று சிறுகதைத் தொகுப்புகள், ஒரு கட்டுரைத் தொகுப்பு ஆகியவை புத்தகங்களாக வெளியாகியிருக்கின்றன. இவரின் 'சிக்கந்தாபுரம்' நாவல் சென்னை புதுக்கல்லூரி முதுகலைத் தமிழ் புத்திலக்கியப் பாடத்திட்டத்தில் இடம்பெற்றுள்ளது. தனியார் துறையில் பணியாற்றி வரும் இவர், மனைவி, இரண்டு குழந்தைகளுடன் காரைக்குடியில் வசித்து வருகிறார்.