கவிஞர் கயல் வேலூர், முத்துரங்கம் அரசு கலைக் கல்லூரியில் வணிகவியல் துறை உதவிப் பேராசிரியராகப் பணியாற்றிவருகிறார். ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும் தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கும் அவர் மொழியாக்கம் செய்துள்ள கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் பல்வேறு இலக்கிய, இணைய இதழ்களில் பிரசுரமாகி உள்ளன.
இதுவரை வெளிவந்த கவிதை நூல்கள் கல்லூஞ்சல் (2015), மழைக் குருவி (2016), ஆரண்யம் (2018), ஆதிவாசிகள் நிலத்தில் போன்சாய் (2019), உயிரளபெடை(2020). பழைய துர்தேவதைகளும் புதிய கடவுளரும் இவருடைய முதல் மொழிபெயர்ப்புச் சிறுகதை நூல்.