எம். ரிஷான் ஷெரீப்

    Filter

      எம். ரிஷான் ஷெரீப் இலங்கையைச் சேர்ந்த தமிழ் எழுத்தாளரும், கவிஞரும், ஊடகவியலாளரும், மொழிபெயர்ப்பாளரும் ஆவார். நாவல்,கவிதை, சிறுகதை, கட்டுரை, புகைப்படம் ஆகிய துறைகளில் பங்களிப்பு செய்து வரும் இவர் சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்புகளையும் மேற்கொண்டு வருகிறார். இந்த நூல்களுக்காக இவர் இதுவரையில் இலங்கை அரச சாகித்திய விருது, கொடகே இலக்கிய விருது, துரைவி விருது, இந்தியா வம்சி விருது, கனடா இயல் விருது, இந்தியா வாசகசாலை விருது போன்ற முக்கியமான விருதுகளை வென்றுள்ளார். இவரது படைப்புகள் சிங்களம், ஆங்கிலம், மலையாளம் ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகியுள்ளன.

      'ஐந்து விளக்குகளின் கதைகள்'. 'சாமிமலை' (இலங்கை அரச சாகித்திய இலக்கிய விருது). 'ஊழின் அடிமையாக வேட்கை தணிக்கும் பெண்ணின் சுயசரிதை', 'ஆகம்', 'உரக்கச் சொல்லாத சின்னஞ் சிறிய கதை' 'மஞ்சள் வர்ண மரணம்' ஆகிய மொழிபெயர்ப்பு நூல்களை 'எதிர் வெளியீடு' பதிப்பித்துள்ளது.