பாரம்பரியக் கடலோடி சமூகத்தைச் சேர்ந்த முனைவர் வறீதையா
கான்ஸ்தந்தின் (பள்ளம்துறை, கன்னியாகுமரி மாவட்டம்) ஒரு கடற்கரைக்
கல்லூரியில் 36 ஆண்டுகள் மீன்வளமும் விலங்கியலும் பயிற்றுவித்து,
இணைப் பேராசிரியராகப் பணிநிறைவு பெற்றவர். 2004 ஆழிப்பேரலையின் பின்னணியில் தமிழக நெய்தல் பழங்குடிகள், சூழலியல், வள அரசியல் சார்ந்த கள ஆய்வு, எழுத்துத் தளங்களில் இயங்கி வருகிறார். கடலம்மா பேசுறங் கண்ணு!, 1000 கடல் மைல், பழவேற்காடு முதல் நீரோடி வரை, மூதாய் மரம், வர்ளக்கெட்டு (சிறுகதைகள்), The Sea Tribes under Siege உள்ளிட்ட 35 நூல்கள், ஆழிப்பேரிடருக்குப் பின், விளிம்பு- மையம்- மொழி, எக்கர் உள்ளிட்ட 13 தொகுப்புகள், இனயம் கரண்ட்ஸ் (ஆவணப் படம்) ஆகியவை இவரது படைப்புகள். விருதுகள்: விகடன் விருது (2015), அமுதன் அடிகள் இலக்கியப் பரிசு (2016), மமா ஆதா விருது (2016), அயாச்சே (புது தில்லி) தேசிய உயர் கல்வியாளர் விருது (2009) முதலியவை.