றாம் சந்தோஷ்

  Filter

   இயற்பெயர் சண்முக. விமல் குமார். தனது இரண்டு பெயர்களிலும்
   எழுதிவரும் இவர், தொல்காப்பியக் கோட்பாடுகள் தொடர்பான ஆய்வை மேற்கொண்டு வரும் தமிழ்த்துறை மாணவர். வாணியம்பாடியை அடுத்த உதயேந்திரத்தில் பிறந்த றாம்,கடந்த ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக ஆந்திர மாநிலம் குப்பம் திராவிடப் பல்கலைக்கழக விடுதி அறைகளில் தனது பாட்டியின் நினைவு, தென் மாநில நண்பர்களின் நட்பு மொழிகள், புத்தகங்கள், உதவு மடிக்கணினிகள், தனக்கு அன்பளிக்கப்பட்ட புத்தக் கற்பாவை, மூன்று கால் மற்குதிரை ஆகியவற்றோடு வசித்து வருகிறார்.

   ‘சொல் வெளித் தவளைகள்’ என்ற தனது முதல் கவிதைத் தொகுப்பிற்காக ‘ஆத்மாநாம் விருது’ (2020) பெற்றவர். ‘மேலும்’ அறக்கட்டளையும் இவரை அங்கீகரித்துள்ளது. இரண்டாம் பருவம் இவருடைய இரண்டாவது கவிதைத் தொகுப்பு.

   மின்னஞ்சல்: tramsanthosh@gmail.com

   2 products