
கே. முஹம்மது ரியாஸ் (1984)
சொந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம். சிங்கப்பூரில் தகவல் தொழில்நுட்ப வல்லுனராகப் பணியாற்றுகிறார். இவருடைய முதல் சிறுகதைத் தொகுப்பான 'அத்தர்' தமிழ் இலக்கியப் பரப்பில் பரவலான கவனத்தைப் பெற்றது. இவரது இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு 'சிகரி மார்க்கம்'. இவருடைய சில சிறுகதைகள் மலையாளத்தில் மொழிபெயர்க்கப்பட்டு நேர்காணலுடன் மாத்ருபூமி, true copy think ஆகிய இதழ்களில் வெளியாகி கவனம் பெற்றன.
மனைவி, இரண்டு பிள்ளைகளுடன் சிங்கப்பூரில் வசித்து வருகிறார்.