பிரேம்

  Filter

   தமிழில் படைப்பிலக்கியத்திலும் கோட்பாட்டுத்தளத்திலும் இயங்கும்
   மிகச் சிலரில் ஒருவர். மார்க்சியத்துடன் பின்நவீனத்துவ, பின்காலனிய,
   விளிம்புநிலை அரசியல் கோட்பாடுகளையும் விவாதங்களையும்
   முன்னெடுத்துச் செல்வதுடன் அவற்றின் செயல்பாடுகளிலும்
   பங்கெடுத்துவருபவர்.


   புதுச்சேரி மாநிலத்தில் பிறந்த இவரது இயற்பெயர் பிரேமானந்தன்.
   1985-89 காலப்பகுதியில் வெளிவந்த ‘கிரணம்’ படைப்புகள்
   தொடங்கி இன்றுவரை படைப்பிலக்கியம், கோட்பாட்டாக்கம்
   என்பவற்றை இணைத்து தொடர்ந்து எழுதி வருபவர். அம்பேத்கர்,
   அயோத்திதாசர் பயிற்சி வகுப்புகள், தலித் நாடக இயக்கம்
   ஆகியவற்றின் அமைப்பாளராக, 1994-2002 காலப்பகுதியில்
   புதுவை தலித் இயக்கங்களின் செயல்பாடுகளில் பங்காற்றியவர்.
   நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், நாடகங்கள்,
   மொழிபெயர்ப்புகள் என 30 நூல்கள் வெளியாகியுள்ளன. தில்லி
   பல்கலைக்கழக நவீன இந்திய மொழிகள் மற்றும் இலக்கிய ஆய்வுகள்
   துறையில் இந்திய இலக்கியம் மற்றும் ஒப்பிலக்கியத்துக்கான
   பேராசிரியர்.