பிரம்மராஜன் - கவிஞர், கட்டுரையாளர் ,
மொழிபெயர்ப்பாளர், விமர்சகர் மற்றும் இதழாசிரியர்.
இதுவரை 6 கவிதைத் தொகுப்புகள் வெளிவந்திருக்கின்றன.
1989ஆம் ஆண்டு வெளிவந்த 'உலகக்கவிதை' என்ற நூலின்
தொகுப்பாசிரியர். 35 இதழ்கள் வெளிவந்த 'மீட்சி' என்ற
இலக்கியச் சிற்றேட்டின் ஆசிரியர். கவிதைப் பட்டறைகள் சிலவற்றை நடத்திய அனுபவம் உண்டு.
1953ஆம் ஆண்டு சேலத்தில் ஒரு விவசாயக் குடும்பத்தில்
பிறந்த பிரம்மராஜன் இயற்பெயர் ஆ.ராஜாராம்.
ஆங்கில இலக்கியத்தில் பட்டம் பெற்றவர். கல்லூரிப்
பணியிலிருந்து ஓய்வுபெற்று தன் பண்ணை வீட்டில்
வசிக்கிறார்.