ச. மாடசாமி

    Filter

       

      ச. மாடசாமி பிறந்தது 1947. பிறந்த ஊர் வடுகப்பட்டி. வடுகப்பட்டி - பெரியகுளம் பாதைகளும், வராக நதி மணல்வெளியும் சிறு வயதுப் பிடிமானங்கள். அவைதாம் சிந்திக்கச் சொல்லித் தந்த ஆசிரியர்கள். முப்பதாண்டு அருப்புக்கோட்டை கல்லூரியில் தமிழ் ஆசிரியர்; மூன்று ஆண்டுகள் நெல்லைப் பல்கலைக்கழகத்தின் இளைஞர் நலத்துறை இயக்குநர். வாழ்நாள் முழுதும் மறக்கமுடியாத அனுபவம், அறிவொளி! கற்றுக் கொடுக்கப் போய்... கற்றுக் கொண்டு வந்தோம். கல்வி குறித்த தெளிவான புரிதல் உண்டானதும், கல்வி குறித்துத் தொடர்ந்து பேசுவதற்கான தெம்பு கிடைத்ததும் அறிவொளியில்தான். எழுதிய நூல்கள் பல. ‘பாம்பாட்டிச் சித்தர்’, ‘பொதுவுடைமை இலக்கியம் - பார்வையும் பயணமும்’, ‘தமிழர் திருமணம் அன்று முதல் இன்று வரை’ ஆகியன ஆய்வு நூல்கள். ‘பூமரப் பெண்’, ‘ஏமாளியும் திருடனும்’, ‘கூத்தாடிகள்’ ஆகியன விவாத நூல்கள். ‘நாய் வால்’, ‘முயல்குட்டியும் போலீசுக்காரரும்’, ‘முதலைக் கதைகள்’, ‘சுண்டெலிக் கதைகள்’ ஆகியன குழந்தைகளுக்கான கதை நூல்கள். ‘எனக்குரிய இடம் எங்கே’, ‘ஆளுக்கொரு கிணறு’, ‘போயிட்டு வாங்க சார்’, ‘ஆசிரிய முகமூடி அகற்றி’ ஆகியவை கல்வி சார்ந்த நூல்கள். எளிய மனிதர்களின் பொருட்டே தொடர்ந்து எழுதுகிறேன்.