சுப்ரபாரதிமணியன்

    Filter

      சுப்பிரபாரதிமணியன்  சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள், கவிதைகள் என பலதளங்களிலும் முப்பது வருடங்களாக எழுதி வருபவர். இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது, தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும், பரிசுகளையும் பெற்றவர். திருப்பூர் பகுதியில் குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு, பெண்களைச் சுரண்டும் சுமங்கலி திட்ட ஒழிப்பு, நொய்யலை பாதுகாத்தல் போன்ற பல்வேறு சமூகப் பிரச்சினைகளிலும் அக்கறை கொண்டவர். இவர் கனவு என்ற இலக்கிய இதழை 27 ஆண்டுகளாக நடாத்திவருபவர். திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுபவர். தொலை பேசித்துறையில் உதவிக் கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். இவரது 25 சிறுகதைகள் பல இந்திய மொழிகளிலும், ஆங்கிலம், ஹங்கேரி மொழிகளிலும் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன. 

      1 product