சீனிவாச ராமாநுஜம்

    Filter

      சென்னைக் கலைக்குழு, பல்கலை அரங்கம், பரீக்ஷா, ஐக்கியா ஆகிய நாடகக் குழுக்களில் எண்பதுகளின் பிற்பகுதியில் பங்காற்றியவர். அதையடுத்து 1990-ல், 'ஆடுகளம்' எனும் நாடகக் குழுவைத் தொடங்கி, மிக முக்கியமான நாடகங்களை இயக்கியுள்ளார். பிறகு 2005-ல், சாதத் ஹசன் மண்ட்டோவின் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகளை 'மண்ட்டோ படைப்புகள்' என்ற தலைப்பில் தொகுத்துத் தமிழாக்கம் செய்தார். இதைத் தொடர்ந்து, ஆர்துரோ வான் வாகனோவின் ‘மௌன வதம், டி.ஆர்.நாகராஜின் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் அடங்கிய 'தீப்பற்றிய பாதங்கள்', சுந்தர் சருக்கை எழுதிய நாடகங்களின் தொகுப்பான ‘இரண்டு தந்தையர்', கோபால் குரு, சுந்தர் சருக்கை இணைந்து எழுதிய 'விரிசல் கண்ணாடி, சுந்தர் சருக்கை எழுதிய 'சிறுவர்களுக்கான தத்துவம்' (த.ராஜனுடன் இணைந்து), 'அறிவியல் என்றால் என்ன?' ஆகிய முக்கியமான புத்தகங்களை மொழியாக்கம் செய்திருக்கிறார். எம்.எஸ்.எஸ்.பாண்டியன், அஷிஸ் நந்தி, சையித் ஹுஸைன் நஸ்ர் ஆகியோரின் எழுத்துகளையும் தமிழுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார். 'காந்தியின் உடலரசியல்', ‘தற்கொலைகளைக் கொண்டாடுவோம்', ‘சந்நியாசமும் தீண்டாமையும்', 'Renunciation and Untouchability: The Notional and the Empirical in the Caste Order', 'இந்து மதம்: ஒரு விசாரணை' ஆகிய நூல்களை எழுதியிருக்கிறார். இவர் பெற்ற விருதுகள்: ஆனந்தாஸ் பீமராஜா இலக்கிய விருது (2016), ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் (2016), 'இந்து தமிழ் நாளிதழின் ஏ.கே.செட்டியார் விருது (2017).

      10 products