க. அம்சப்ரியா

    Filter

      அம்சகோபால் முருகன் என்கிற இயற்பெயருடைய க. அம்சப்ரியா பொள்ளாச்சி பில்சின்னாம்பாளையம் சிராமத்தில் வசித்து வருகிறார். சூரியப்பிரசவங்கள் எனகிற முதல் கவிதை தொகுப்பின் வழியே இலக்கிய உலகிற்கு அறிமுகமானார். இதுவரை 27 நூல்கள் வெளிவந்துள்ளன. கவிதையியல், கலவியியல், சூழலியல, சிறாரியல் என்று பன்முகத் தன்மையோடு இயங்கிவரும் இவர் பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் தலைவராகவும், புன்னகை இதழ் ஆசியராகவும், அறிவுச்சோலை கல்வி விழிப்புணர்வு மையத்தின் நிறுவனராகவும் செயலபட்டுவருகிறார். குழந்தைமையைக் கொண்டாடும் இவரது கவிதைகளில் கண்டறிந்த நுட்பத்தின அடிப்படையில் கவிஞர் ப்ரியம் அவர்கள் இவரது குழந்தைமைக் கவிதைகளை 'அதிஸ்சியா சாகபீஸ் கவிதைகள்' என்ற பெயரில் தொகுத்துள்ளார். தமிழ் இந்து நாளிதழ் இவரின் 'பசுமைக கவிதைகளில் ஒரு சூழலியல் பயணம்' என்ற நூலினை அந்த ஆண்டு வெளிவந்த நூல்களில் சிறந்த நூலாக அடையாளப்படுத்தியது.

      இவர் சிற்பி இலக்கிய பரிசு, கவிஞர் மீரா விருது. சௌமா விருது, கம்பம் பாரதி தமிழ் இலக்கிய பேரவையின் பரிசுகள், உலகத் தமிழ்ப்பண்பாட்டு மையத்தின் சிறப்புப் பரிசு, தமிழ்நாடு கல்ல இலக்கியப் பெருமன்றம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கம் உட்பட பல்வேறு அமைப்புகளின் விருதுகளைப் பெற்றுள்ளார். சிறுகதை, கவிதை, சிறார் இலக்கியம், குறுநாவல் என விரிவான களத்தில் இயங்கி வருகிறார்.

      1 product