கௌதம சித்தார்த்தன்

  Filter


    

   தமிழ் மொழியின் இன்றைய தேவை அரசியல் மொழி என்று சொல்லும் கௌதம சித்தார்த்தன் முதன்மையான இலக்கிய எழுத்தாளர் மற்றும் மூன்றாம் உலகம் சார்ந்த மாற்றுப் பார்வை கொண்ட பத்திரிகையாளர். கடந்த 20 வருடங்களாக நவீனத்தமிழ் இலக்கிய தளத்தில் கதை,கட்டுரை போன்ற தளங்களில் செயல்பட்டுக் கொண்டிருப்பவர். 1990 களில் நவீனத்துவம் மறைந்து பின்நவீனத்துவப் படைப்புகள் உலகளவில் பரபரப்பாகச் செயல்பட்ட தருணத்தில், தமிழ் மொழியின் ஆன்மாவுக்கேற்ற விதமாக பின்நவீனத்துவ எழுத்தை தமிழின் வேர்களைத் தேடும் விதமாக மாற்றி, தமிழ்ச்சிறுகதை தளத்தில் புதுவகை எழுத்து என்னும் ஒருசிந்தனைப் போக்கை உருவாக்கியவர். உன்னதம் என்னும் இதழை துவக்கத்தில் இலக்கிய இதழாக வெளியிட்டு மெல்லமெல்ல சர்வதேச அரசியல் இதழாக மாற்றி நடத்தியவர். (தற்போது இதழ் நின்றுவிட்டது) பலவருடங்களாக இலக்கியச் செயல்பாடுகளிலிருந்து விலகியிருந்த இவர் தற்போது மீண்டும் தீவிரமாக செயல்பட ஆரம்பித்திருக்கிறார்.

   2 products