எஸ்.வி. ராஜதுரை

    Filter

      தமிழுலகில் நன்கு அறிமுகமாகியுள்ள எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். மார்க்ஸியச் சிந்தனையாளரான அவர், அம்பேத்கர், பெரியார் ஆகியோரின் கருத்துகளால் ஈர்க்கப்பட்டவர்.

      'எக்ஸிஸ்டென்ஷியலிசம்', 'அந்நியமாதல்', 'ரஷியப் புரட்சி: இலக்கிய சாட்சியம்', 'இந்து இந்தி இந்தியா', 'பெரியார்: ஆகஸ்ட் 15' முதலிய நூல்களையும் ஏராளமான கலை, இலக்கியக் கட்டுரைகளையும் எழுதியுள்ளவர். பல்வேறு மார்க்ஸிய அறிஞர்களைத் தமிழுலகத்திற்கு அறிமுகம் செய்துள்ள அவர், விரிவான விளக்கக் குறிப்புகளுடன் தமிழாக்கம் செய்துள்ள மார்க்ஸ், எங்கெல்ஸ் ஆகியோரின் 'கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை' மிகவும் குறிப்பிடத்தக்கது.