
அருணா சிற்றரசு (1987)
இந்நூலின் ஆசிரியர் அருணா சிற்றரசு திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் பிறந்தவர். அரசு உயர் நிலைப்பள்ளி ஒன்றில் ஆங்கிலப் பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். 2017ஆம் ஆண்டில் திருவாரூர் மாவட்டத்தின் ஆங்கில ஆசிரியர்களுக்கான நட்சத்திர சாதனையாளர் விருதைப் பெற்றவர். இணைய இதழ்களில் சிறுகதைகள் எழுதி கவனம் பெற்றவர். 'அருகன்' இவரின் முதல் சிறுகதைத் தொகுப்பாகும்.