{"title":"வேல்முருகன் இளங்கோ","description":"\u003cp\u003e\u003cimg src=\"https:\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0614\/9003\/6890\/files\/Velmurugan_Ilango.jpg?v=1786801043\" alt=\"\" width=\"142\" height=\"142\"\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eதிருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகில் உள்ள வடுவூர் இவரது பிறப்பிடம். பொறியியல் துறையில் பணியாற்றி வருகிறார்.\u003c\/p\u003e\n\u003cp\u003eஇவரது முதல் நாவல் மன்னார் பொழுதுகள். இரவாடிய திருமேனி  இரண்டாவது நாவல் வெளிவந்துள்ளது.\u003c\/p\u003e","products":[{"product_id":"மன்னார்-பொழுதுகள்","title":"மன்னார் பொழுதுகள்","description":"\u003cp\u003eசமகாலத்தில் வாசிக்க வாய்த்த நாவல்களில் மனம் கவர்ந்தது இது. இளம் நாவலாசிரியரான வேல்முருகன் இளங்கோ தன் திறன் உரைத்து நில்லாமல், நாவலை வளர்த்துச் செல்வதில் முனைப்புடன் செயல்பட்டிருக்கிறார்.\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eதமிழில் ஓர் இளைய திறன்மிக்க படைப்பாளி, நம்பிக்கை தரும் நாவலாசிரியர் எனும் நிலையெல்லாம் கடந்து, தேர்ந்த நாவலாசிரியர் வரிசையில் வைப்பேன் வேல்முருகன் இளங்கோவை. எப்பகுதியிலும், எந்த உறவிலும் எச்சம்பவத்திலும் செயற்கைத்தனம் அற்ற, புனைவென்று உணர்த்தாத விதத்தில் இவர் படைப்பு பேசுகிறது. அரை நூற்றாண்டுக்கும் மேலாகப் புனைவிலக்கியம் வாசிப்பவன் என்பதால் காலந்தோறும் பன்முகப்பட்ட எழுத்தாளுமைகளை எதிர்கொண்டு வந்திருக்கிறேன். புத்தம் புதிய, படைப்பூக்கமுள்ள, சொல் திறனில் நவீனமுள்ள, மொழித் தேர்ச்சியுள்ள இளைய நாவலாசிரியர் ஒருவர் ‘மன்னார் பொழுதுகள்’ மூலம் அறிமுகம் ஆனதில் களிப்பு உண்டு எமக்கு.\u003c\/p\u003e\n\u003cp\u003e– \u003cem\u003eநாஞ்சில் நாடன்\u003c\/em\u003e\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eAuthor\u003c\/strong\u003e:\u003cspan\u003e வேல்முருகன் இளங்கோ\u003c\/span\u003e\u003cspan\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003e\u003cstrong\u003e\u003c\/strong\u003e\u003c\/span\u003e\u003cspan\u003e\u003cstrong\u003eGenre\u003c\/strong\u003e: நாவல்\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003e\u003cstrong\u003eLanguage\u003c\/strong\u003e: தமிழ்\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003e\u003cstrong\u003eType\u003c\/strong\u003e: Paperback\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003e\u003cstrong\u003eISBN\u003c\/strong\u003e: 9788119576951\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003c!----\u003e","brand":"Ethir Veliyeedu","offers":[{"title":"Default Title","offer_id":45000188133530,"sku":"","price":495.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0614\/9003\/6890\/files\/mannarpozuthukalcopy.jpg?v=1718194417"},{"product_id":"இரவாடிய-திருமேனி","title":"இரவாடிய திருமேனி","description":"\u003cdiv class=\"x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a\"\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003e\u003cbr\u003e\u003c\/div\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003e\n\u003cdiv class=\"gmail_default\"\u003e\u003cspan\u003eவேல்முருகன் இளங்கோவின்  இந்நாவலை காவியம் அல்லது எதிர்-காவியம் என்ற வகைமையில் நிறுத்தலாம். வாழ்வு குறித்து நாம் ஒருபோதும் விடை காணமுடியாத  கேள்விகளோடு, அதிகாரம் காரம், உறவு, இருப்பு, மரணம் ஆகியவற்றை அடி பொருளாகக் கொண்டு மதுரை மற்றும் மேற்கு மலைக் காட்டின் பின்னணியில்  நாவல் விரிகிறது.\u003c\/span\u003e\u003c\/div\u003e\n\u003cdiv class=\"gmail_default\"\u003e\u003cspan\u003e\u003cbr\u003e\u003c\/span\u003e\u003c\/div\u003e\n\u003cspan\u003eகடந்த காலத்தை இரண்டாம் ஜாமம், குறு வாள்,\u003c\/span\u003e\u003cspan class=\"gmail_default\"\u003e \u003c\/span\u003e\u003cspan\u003eஉப்பரிகை,\u003c\/span\u003e\u003cspan class=\"gmail_default\"\u003e \u003c\/span\u003e\u003cspan\u003eசாமரம் போன்ற சொற் சேர்ப்பு விளையாட்டுகளில் நிகழ்த்தி விட முடியாது. படைப்பாளி தன்னைக்  கரைத்து அந்த காலத்திற்குச் செல்ல வேண்டும். இதை எழுதிய ஆண்டுகளில் வேல்முருகன் இளங்கோ தன் வீட்டிற்கு ஒவ்வொரு இரவிலும்  குதிரையிலேயே  திரும்பியிருப்பார் என நம்புகிறேன்.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003cspan\u003eநாவலில் இரவாடிய திருமேனி எனும் காவியத்தை  இயற்ற வந்தவன் தன் காவியத்திற்குள்ளேயே ஒரு பாத்திரமாய் சிக்கிக் கொள்வதைப் போல் நாமும் அதன் மொழி அழகிலும், அது எழுப்பும் ஆதாரமான,  உணர்வுப்பூர்வமான கேள்விகளின் வழி சிக்கிக் கொள்கிறோம். அதுவே \u003c\/span\u003e\u003cspan class=\"gmail_default\"\u003e\u003c\/span\u003e\u003cspan\u003eஇரவாடிய திருமேனியை தமிழின் மிக முக்கியப் படைப்புகளில் ஒன்றாக ஆக்குகிறது.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003cspan\u003e-\u003c\/span\u003e\u003cspan class=\"gmail_default\"\u003e \u003c\/span\u003e\u003ci\u003eசாம்ராஜ்\u003c\/i\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv class=\"x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a\"\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003e\u003cbr\u003e\u003c\/div\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003e\u003cbr\u003e\u003c\/div\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003e\n\u003cp\u003eAuthor: \u003cspan\u003eவேல்முருகன் இளங்கோ\u003c\/span\u003e\u003cspan\u003e\u003c\/span\u003e\u003cspan\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eGenre: நாவல் \u003c\/p\u003e\n\u003cp\u003eLanguage: தமிழ்\u003c\/p\u003e\n\u003cp\u003eType: Paperback\u003c\/p\u003e\n\u003cp\u003eISBN: 9788119576876\u003c\/p\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e","brand":"Ethir Veliyeedu","offers":[{"title":"Default Title","offer_id":45384440414362,"sku":"","price":495.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0614\/9003\/6890\/files\/Iravadiya_thirumeni.jpg?v=1733303434"}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0614\/9003\/6890\/collections\/Velmurugan_Ilango.jpg?v=1786801134","url":"https:\/\/ethirveliyeedu.com\/collections\/%e0%ae%b5%e0%af%87%e0%ae%b2%e0%af%8d%e0%ae%ae%e0%af%81%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b3%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%8b.oembed","provider":"Ethir Veliyeedu","version":"1.0","type":"link"}