{"title":"ரவிசுப்பிரமணியன்","description":"\u003cp\u003e\u003cimg src=\"https:\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0614\/9003\/6890\/files\/Ravisubramaniyan.jpg?v=1786864534\" alt=\"\" width=\"140\" height=\"210\"\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eகும்பகோணத்தில் பிறந்த ரவிசுப்பிரமணியன் 1982ஆம் ஆண்டிலிருந்து கவிதை, கட்டுரை, நாடகம், சிறுகதை என தொடர்ந்து எழுதி வருபவர். தன் இலக்கியப் படைப்புகளுக்காக, தமிழக அரசு பரிசு திருப்பூர் தமிழ்ச் சங்க விருது. நியூ ஜெர்சி தமிழ்ச் சங்க விருது, சிற்பி இலக்கிய விருது, தி.க.சி. இயற்றமிழ் விருது. மா. அரங்கநாதன் வாழ்நாள் சாதனை இலக்கிய விருது, தஞ்சை ப்ரகாஷ் கவிதை விருது, ஆனந்தாஸ் எம்.பி. ராதாகிருஷ்ணன் கலை இலக்கிய விருது, படித்துறையின் தமிழிலக்கிய பேராளுமை விருது. எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் பாரதியார் விருது போன்ற விருதுகளைப் பெற்றுள்ளார்.\u003c\/p\u003e\n\u003cp\u003eசாகித்ய அகாடமியின் ஆலோசனைக் குழு உறுப்பினராக பங்களித்துள்ளார். இப்போது சில மத்திய மாநில அளவிளான மற்றும் தனியார் அமைப்புகளின் சில இலக்கிய விருதுகளின் நடுவர் குழுவிலும் அங்கம் வகிக்கிறார். இந்திரா பார்த்தசாரதி. மா. அரங்கநாதன், ஜெயகாந்தன், டி.என். ராமச்சந்திரன், திருலோக சீதாராம் போன்ற இலக்கிய ஆளுமைகளைப் பற்றிய ஆவணப்படங்களை இயக்கி உள்ளார். அவற்றில் சில, அமெரிக்கா, கனடா மற்றும் இங்கிலாந்து நாடுகளின் கல்விப்புல அங்கீகாரம் பெற்றுள்ளன.\u003c\/p\u003e\n\u003cp\u003eநாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக வானொலியில் நாடகக் கலைஞராக, நாடக எழுத்தாளராக பங்காற்றி வருகிறார். தமிழ் திரைப்பட எழுத்தாளர் சங்கம், தமிழ் திரைப்பட டப்பிங் சங்கம் போன்றவற்றில் உறுப்பினரான இவர், 'டு லெட்' திரைப்படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமாகி, தற்போது 'சக்தித் திருமகன்'. திரைப்படம் உட்பட மேலும் சில படங்களில் நடித்து வருகிறார். தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் மதிப்புறு இலக்கிய ஆளுமையாக பணியாற்றினார். மத்திய அரசின் தேசிய திரைப்பட விருதுகளின் தேர்வுக்குழு நடுவராகவும் இருந்த இவர். மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான 'தாமரை' என்ற குறும்படத்தையும் எழுதி இயக்கி வெளியிட்டார். தற்சமயம் திரைப்பட இயக்குனர் கே. பாலச்சந்தர் மற்றும் இயக்குனர் பீம்சிங் ஆகியோரைப் பற்றிய ஆவணப்படங்களை இயக்கி வருகிறார். தமிழில் நூற்றுக்கும் மேற்பட்ட புதுக்கவிதைகளுக்கும் முப்பதுக்கும் மேற்பட்ட பழந்தமிழ்ப் பாடல்களுக்கும் மெட்டமைத்ததோடு அவற்றை இலக்கிய மேடைகளில் பாடியும் வருகிறார்.\u003c\/p\u003e","products":[{"product_id":"நினைவில்-நிற்கும்-மனிதர்கள்","title":"நினைவில் நிற்கும் மனிதர்கள்: ஆளுமைகள் பற்றிய கட்டுரைகள்","description":"\u003cdiv class=\"gmail_default\"\u003e\u003cspan\u003eகலையோடு ஒருவனுக்கு எவ்வளவு பரிச்சயம் இருப்பினும் எத்தருணம் அல்லது எது அவனை  கலைஞனாக மாற்றுகிறது என்பது ஒரு பெரும் புதிர்.\u003c\/span\u003e\u003c\/div\u003e\n\u003cp\u003e\u003cbr\u003e\u003cspan\u003eதிருவள்ளுவரை, மாணிக்கவாசகரை, பாரதியை  அவர்களது எழுத்துக்கள் வழியே பார்க்கையில், அவர்கள் தங்கள் வாழ்க்கையின் நெருக்கடிகளை எப்படி எதிர்கொண்டிருப்பார்கள். அவர்கள் பிறருடன் எப்படி பேசி பழகியிருந்திருப்பார்கள். அன்பு மட்டுமேவா இருந்திருக்கும். சண்டை போட்டிருக்கமாட்டார்களா. கோபப்பட்டிருக்கவேமாட்டார்களா. அழுதிருக்கமாட்டார்களா. எவ்வுலகிலாவது சந்தித்தால் அவர்களிடம் இது பற்றியெல்லாம் கேட்க வேண்டும். இவர்களோடு ஒருவனுக்குப் பழக முடிந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் என்றெல்லாம் சாத்தியமில்லாததை நினைத்ததுண்டு.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003cspan\u003eஆனால், நம் காலத்தில் நாம் கலைஉறவு கொண்டிருக்கும் மனிதர்களிடம் பழகுதல் சாத்தியம் தானே. அப்படி பழகவும் பார்க்கவும் பயணப்பட்டபடியேதான் இருக்கிறேன். அந்தப் பயணத்தில் சிலர் அவர்களது படைப்புகளைவிடவும் செம்மாந்து நின்று ஆச்சர்யம் தந்தனர். அதுபோன்ற சில வியப்புகளின் கையளவு பகிர்தலே இக்கட்டுரைகள்.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cbr\u003eAuthor: ரவிசுப்பிரமணியன் \u003c\/p\u003e\n\u003cp\u003eGenre: \u003cspan\u003eநினைவோடை\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eLanguage: தமிழ்\u003c\/p\u003e\n\u003cp\u003eType: Paperback \u003c\/p\u003e\n\u003cp\u003eISBN: \u003cspan\u003e9789348598639\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Ethir Veliyeedu","offers":[{"title":"Default Title","offer_id":45597351051418,"sku":"","price":297.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0614\/9003\/6890\/files\/NinaivilNirkum_47cdf532-2f0b-41d7-a16d-3c38b32a89a8.jpg?v=1742023558"}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0614\/9003\/6890\/collections\/Ravisubramaniyan.jpg?v=1786864582","url":"https:\/\/ethirveliyeedu.com\/collections\/%e0%ae%b0%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9a%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a9%e0%af%8d.oembed","provider":"Ethir Veliyeedu","version":"1.0","type":"link"}