{"title":"முனைவர் சுப. உதயகுமாரன்","description":"\u003cp\u003e\u003cimg src=\"https:\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0614\/9003\/6890\/files\/Suba_Udhyakumar.jpg?v=1786801387\" alt=\"\" width=\"143\" height=\"143\"\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eமுனைவர் சுப. உதயகுமாரன்\u003c\/p\u003e\n\u003cp\u003eதிருவனந்தபுரத்திலுள்ள கேரளாப் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டமும், அமெரிக்காவின் நோட்ரேடேம் பல்கலைக்கழகத்தில் அமைதிக் கல்வியில் இரண்டாவது முதுகலைப் பட்டமும், ஹவாய் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் முனைவர் பட்டமும் பெற்றவர். தமிழிலும், ஆங்கிலத்திலும் பல நூல்களை எழுதியிருக்கிறார். தற்போது 'பச்சைத் தமிழகம்' கட்சியின் தலைவராகவும், அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளராகவும் இயங்கிக் கொண்டிருக்கிறார். தமிழகத்தின் தென்கோடி நகரமான நாகர்கோவிலில் குடும்பத்துடன் வசிக்கிறார்.\u003c\/p\u003e","products":[{"product_id":"பொது-சிவில்-சட்டம்-uniform-civil-code-ஒரு-விளக்கக்-கையேடு","title":"பொது சிவில் சட்டம்: (Uniform Civil Code) ஒரு விளக்கக் கையேடு","description":"\u003cblockquote\u003e\u003cspan style=\"color: #ff8000;\"\u003e\u003cstrong\u003e\u003c\/strong\u003e\u003c\/span\u003e\u003c\/blockquote\u003e\n\u003cp\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eஇந்தியா பல்வேறு தேசிய இனங்களும்,\u003c\/span\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eமதங்களும், மொழிகளும் சேர்ந்து வாழும் ஒரு பன்முகத்தன்மை\u003c\/span\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eகொண்ட நாடு. இந்த நாட்டின் சட்ட திட்டங்களும் அதே\u003c\/span\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eபன்முகத்தன்மையைப் பிரதிபலிப்பதுதான் பெருமை, சிறப்பு.\u003c\/span\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eஇந்நாட்டு மக்களிடையே மனித உரிமைகள் பேணலில் வேறுபாடுகள்,\u003c\/span\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eஏற்றத்தாழ்வுகள் இருக்கக் கூடாது. பெரும்பான்மையினரின் சிவில்\u003c\/span\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eசட்டங்களை பிறர் மீது சுமத்தக்கூடாது. அதேபோல, பொது சிவில்\u003c\/span\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eசட்டம் ஒன்றை அனைவர் மீதும் வலிந்து திணிக்க முடியாது,\u003c\/span\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eகூடாது. ஒரே சட்டத்தின் பல்வேறு வடிவங்களை இயற்றி,\u003c\/span\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eஅவற்றை பல்வேறு சமூகங்களுக்கானவையாக வைத்திருக்கலாம்.\u003c\/span\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eஅல்லது இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் உள்ள தனிநபர்\u003c\/span\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eசட்டங்களின் சிறந்த அம்சங்களைத் தேர்ந்து \u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\" class=\"gmail_default\"\u003e\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eபொது சிவில் சட்டம்\u003c\/span\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eஒன்றைத் தயாரிக்கலாம் என்பவைதான் பன்மைத்தன்மையை\u003c\/span\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eஆதரிக்கிறவர்களின் வாதங்கள்.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eAuthor\u003c\/strong\u003e:\u003cspan\u003e முனைவர் சுப. உதயகுமாரன்\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e\u003cstrong\u003e\u003c\/strong\u003e\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e\u003cstrong\u003eGenre\u003c\/strong\u003e: கட்டுரை\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e\u003cstrong\u003eLanguage\u003c\/strong\u003e: தமிழ்\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e\u003cstrong\u003eType\u003c\/strong\u003e: Paperback\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Ethir Veliyeedu","offers":[{"title":"Default Title","offer_id":43735570546842,"sku":"","price":45.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0614\/9003\/6890\/files\/PothuSivilSattamFront.jpg?v=1689411354"},{"product_id":"உலக-அக்ரகாரம்","title":"உலக அக்ரகாரம்","description":"\u003cdiv class=\"gmail_default\"\u003e\u003cspan style=\"color: rgb(0, 0, 0);\"\u003eதான் வாழும் உலகை, அதன் சமூக-பொருளாதார-அரசியல் ஏற்பாடுகளை நுட்பமாகப் புரிந்துகொள்வதும், அதனைப் பிறருக்குத் தெளிவாக எடுத்துச் சொல்வதும் சமூக அறிவியல் மாணவரின் கடமை. அந்த வகையில் வடக்கு- தெற்கு என்று பிரிக்கப்பட்டிருக்கும் நமது நவீன உலகை ஓர் அக்ரகாரமாகவே நான் பார்க்கிறேன்.\u003c\/span\u003e\u003c\/div\u003e\n\u003cp\u003e\u003cspan style=\"color: rgb(0, 0, 0);\"\u003e\u003cbr\u003eகாலங்காலமாக அதிகார வர்க்கங்கள் தங்களின் வேற்றுப்படுத்தலுக்கும், கட்டுப்படுத்தலுக்கும் பல்வேறு காரணங்களையும் உத்திகளையும் கைக்கொண்டு வந்திருக்கின்றன. நிறவெறி, இனவெறி, மதவெறி, சாதிவெறி, காமவெறி போன்ற அதிகார வெறிக் கோட்பாடுகள் தோய்ந்த நிலப்பிரபுத்துவம், அடிமைத்தனம், காலனியாதிக்கம், அபார்தைட், ஆணாதிக்கம் உள்ளிட்ட பல்வேறு உபாயங்களுள் மிகவும் கொடூரமானது, கொடுமையானது, சூழ்ச்சிமிக்கது பார்ப்பனீய உத்தி என்பதைச் சுட்டிக்காட்ட விழைகிறேன்.\u003c\/span\u003e\u003cspan style=\"color: rgb(0, 0, 0);\"\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eAuthor: முனைவர் சுப. உதயகுமாரன் \u003c\/p\u003e\n\u003cp\u003eGenre: கட்டுரை \u003c\/p\u003e\n\u003cp\u003eLanguage: தமிழ்\u003c\/p\u003e\n\u003cp\u003eType: Paperback \u003c\/p\u003e\n\u003cp\u003eISBN: 9788119576777\u003c\/p\u003e","brand":"Ethir Veliyeedu","offers":[{"title":"Default Title","offer_id":45392029384858,"sku":"","price":252.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0614\/9003\/6890\/files\/UlagaAggaragaram.jpg?v=1733817142"},{"product_id":"பார்ப்பனீயப்-பாசிசம்","title":"பார்ப்பனீயப் பாசிசம்","description":"\u003cp\u003e\u003cspan style=\"color: rgb(0, 0, 0);\"\u003e'பாசிசம்' என்பது அடக்கியாள விரும்புகிற ஓர் அரசியல் சித்தாந்தத்தைக் குறிக்கும் சொல். சர்வாதிகாரம், எதேச்சாதிகாரம், கொடுங்கோன்மை, தான்தோன்றித்தனம், ஆதிக்கவாதம், முழுமைவாதம், சர்வாதிபத்தியம், நாசிசம், சாதியவாதம், இனத்துவம், வலதுசாரி, பிற்போக்குவாதி என்றெல்லாம் நமது அன்றாட அரசியல் வாழ்வில் நாம் பயன்படுத்துகின்ற பற்பல சொற்களின் உட்கருத்துகளையும் உள்ளடக்கிய ஒரே சொல்தான் பாசிசம்.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eAuthor: முனைவர் சுப. உதயகுமாரன் \u003c\/p\u003e\n\u003cp\u003eGenre: கட்டுரை \u003c\/p\u003e\n\u003cp\u003eLanguage: தமிழ்\u003c\/p\u003e\n\u003cp\u003eType: Paperback \u003c\/p\u003e\n\u003cp\u003eISBN: 9788119576050\u003c\/p\u003e","brand":"Ethir Veliyeedu","offers":[{"title":"Default Title","offer_id":45392032792730,"sku":"","price":72.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0614\/9003\/6890\/files\/ParppaniyaFacism.jpg?v=1733817658"},{"product_id":"குடியுரிமை-திருத்தச்-சட்டம்-2019","title":"குடியுரிமை திருத்தச் சட்டம் 2019: தேசிய மக்கள்தொகைப் பதிவேடு: தேசிய குடிமக்கள் பதிவேடு","description":"\u003cp\u003e\u003cspan\u003eபாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காள தேசம் எனும் மூன்று நாடுகளிலுமுள்ள மதரீதியாகத் துன்புறுத்தப்படும் இந்துக்கள், பௌத்தர்கள், சமணர்கள், பார்சிகள், சீக்கியர்கள், கிறித்தவர்கள் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கலாம் என்கிறது குடியுரிமை திருத்தச்சட்டம் 2019. ஆனால் இசுலாமியர்களைக் கவனமாகப் புறக்கணிக்கிறது. ‘தேசிய மக்கள் தொகைப் பதிவேடு’ (National population Register)  மற்றும் ‘தேசிய குடிமக்கள் பதிவேடு’ (National Register of Citizens) எனும் இரண்டு விடயங்களையும் அது நிறுவ முயல்கிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eAuthor: முனைவர் சுப. உதயகுமாரன் \u003c\/p\u003e\n\u003cp\u003eGenre: கட்டுரை \u003c\/p\u003e\n\u003cp\u003eLanguage: தமிழ்\u003c\/p\u003e\n\u003cp\u003eType: Paperback \u003c\/p\u003e\n\u003cp\u003eISBN: 9788119576609\u003c\/p\u003e","brand":"Ethir Veliyeedu","offers":[{"title":"Default Title","offer_id":45392035283098,"sku":"","price":45.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0614\/9003\/6890\/files\/KudiyurimaiThiruthasattam.jpg?v=1733818117"}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0614\/9003\/6890\/collections\/Suba_Udhyakumar.jpg?v=1786801645","url":"https:\/\/ethirveliyeedu.com\/collections\/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9%e0%af%88%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%af%81%e0%ae%aa-%e0%ae%89%e0%ae%a4%e0%ae%af%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a9%e0%af%8d.oembed","provider":"Ethir Veliyeedu","version":"1.0","type":"link"}