{"title":"முஹம்மது ரியாஸ்","description":"\u003cp\u003e\u003cimg src=\"https:\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0614\/9003\/6890\/files\/Mohamad_Riaz.jpg?v=1786807185\" alt=\"\" width=\"147\" height=\"222\"\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e\n\u003cp\u003eகே. முஹம்மது ரியாஸ் (1984)\u003c\/p\u003e\n\u003cp\u003eசொந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம். சிங்கப்பூரில் தகவல் தொழில்நுட்ப வல்லுனராகப் பணியாற்றுகிறார். இவருடைய முதல் சிறுகதைத் தொகுப்பான 'அத்தர்' தமிழ் இலக்கியப் பரப்பில் பரவலான கவனத்தைப் பெற்றது. இவரது இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு 'சிகரி மார்க்கம்'. இவருடைய சில சிறுகதைகள் மலையாளத்தில் மொழிபெயர்க்கப்பட்டு நேர்காணலுடன் மாத்ருபூமி, true copy think ஆகிய இதழ்களில் வெளியாகி கவனம் பெற்றன.\u003c\/p\u003e\n\u003cp\u003eமனைவி, இரண்டு பிள்ளைகளுடன் சிங்கப்பூரில் வசித்து வருகிறார்.\u003c\/p\u003e","products":[{"product_id":"எஃபெந்தி","title":"எஃபெந்தி","description":"\u003cdiv class=\"x14z9mp xat24cr x1lziwak x1vvkbs xtlvy1s x126k92a\"\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003e\n\u003cdiv class=\"x14z9mp xat24cr x1lziwak x1vvkbs xtlvy1s x126k92a\"\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003e\n\u003cdiv\u003e\n\u003cdiv class=\"gmail_default\"\u003eகரையும்  கடலுமாய் அலைவுறும்  கடலோடிகளின் வாழ்வு கண்ணீருக்கும்  தண்ணீருக்கும் நடுவில் உவர்ப்புடன் ஊடாடும் ஒரு தனிமையான படகு.  முரசறைந்து சங்கு முழங்கி முத்துக்களுடனும் மீன்களுடனும் கரைக்குத் திரும்பும் அவர்களது மரபுகள், சடங்குகள், அரசியல், பண்பாட்டுக் கூறுகள் புனைவெழுத்தில் உச்சம் தொட வேண்டியவை.\u003cbr\u003e\u003cbr\u003eஅவ்வகையில் துருக்கியர் வழங்கும் உயரிய பட்டமான ‘எஃபெந்தி’ யைச் சூடிக்கொள்ளும் முஹம்மது ரியாஸின் இந்த முதல் நாவல் கட்டமைக்கும் புனைவுலகம் இலங்கைக்கு சற்றுக் கீழ்  தென் தமிழகத்தின் ‘ஷீத் ரஸ்தா’ [எ] பழைய சேதுபதி சாலையை ஒட்டி அலையாத்திக்காடுகள் சூழ்ந்த ‘முத்துக்குடா’ எனும் கடல் முகத்துவாரம். அதற்கு  மேல் வாழ்ந்த மறைக்காயர்கள் குறித்த கதையாடல்கள் தமிழ் இலக்கியத்திற்கு அதிகம் அறிமுகம் இல்லாதவை.\u003cbr\u003e\u003cbr\u003e‘கொடிமர பிறை தேடும் நாள்’ தொடங்கி ‘கொடியிறக்கம்’ வரை கவுச்சியடிக்கும் பட்டின மனிதர்களின் உரையாடல்கள் வழியாக ஆழ்கடல் கழிஓதமாய் ஓடும் இந்த நாவலின் மொழியும் கதாபாத்திரங்களும் வாசகர்களுக்குப் புதிய அனுபவத்தைத் தரக்கூடியவை.\u003cspan class=\"im\"\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003ci\u003eஅனீஸ்\u003cbr\u003eதிரைப்பட இயக்குநர்\u003c\/i\u003e\u003c\/span\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv class=\"gmail_default\"\u003e\u003cbr\u003e\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e\n\u003cp\u003eAuthor: முஹம்மது ரியாஸ்\u003c\/p\u003e\n\u003cp\u003eGenre: நாவல்\u003cspan\u003e  \u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eLanguage: தமிழ்\u003c\/p\u003e\n\u003cp\u003eType: Paperback\u003c\/p\u003e\n\u003cp\u003eISBN: \u003cspan\u003e97893\u003c\/span\u003e\u003cspan class=\"gmail_default\"\u003e7577\u003c\/span\u003e\u003cspan\u003e009\u003c\/span\u003e\u003cspan\u003e1\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Ethir Veliyeedu","offers":[{"title":"Default Title","offer_id":46957511803034,"sku":null,"price":270.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0614\/9003\/6890\/files\/603870861_10224747196667324_8168099196417933562_n.jpg?v=1767097799"}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0614\/9003\/6890\/collections\/Mohamad_Riaz.jpg?v=1786807254","url":"https:\/\/ethirveliyeedu.com\/collections\/%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81-%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b8%e0%af%8d.oembed","provider":"Ethir Veliyeedu","version":"1.0","type":"link"}