{"title":"மால்கம்","description":"\u003cp\u003e\u003cimg src=\"https:\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0614\/9003\/6890\/files\/Qudupudeen.jpg?v=1785830725\" alt=\"\" width=\"147\" height=\"147\"\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eமால்கம்\u003c\/strong\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eஇயற்பெயர் குதுப். சுருக்கமாக காஜா குதுப்தீன்.\u003c\/p\u003e\n\u003cp\u003eஇராமநாதபுரம் மாவட்டம், நம்புதாளை என்ற கடற்கரை கிராமம் சொந்த ஊர்.\u003c\/p\u003e\n\u003cp\u003eபத்திரிகை - தகவல் தொடர்பியல் மற்றும் வரலாற்றியலில் முதுகலை\u003cbr\u003eபடித்துள்ளார்.\u003c\/p\u003e\n\u003cp\u003eபுதிய தலைமுறை, நியூஸ் 7 தமிழ் உள்ளிட்ட தொலைக்காட்சிகளில்\u003cbr\u003eபணியாற்றிய இவர், பதிப்பகம் - ஊடகம் என எழுத்துத் துறையில் 15\u003cbr\u003eஆண்டுகளுக்கும் மேலாக பயணித்து வருகிறார்.\u003cbr\u003eமால்கம் என்ற புனைப்பெயரில் புனைவுகள், கட்டுரைகள், நூல் விமர்சனங்கள்\u003cbr\u003eஎழுதி வருகிறார்.\u003c\/p\u003e\n\u003cp\u003eஇதுவரை வெளியாகியுள்ள படைப்புகள்\u003c\/p\u003e\n\u003cp\u003eகட்டுரைகள்\u003cbr\u003e● என் புரட்சி (Malcolm X - Bio Fiction)\u003cbr\u003e● மால்கம் X அறிமுகமும் அரசியலும்\u003cbr\u003e● மால்கம் X பார்வையில் அரசியல் இஸ்லாம்\u003cbr\u003e● புத்தகக் கடைக்காரரின் கதை (Lewis Michaux - Bio Fiction)\u003cbr\u003e● ஸஹ்ரான் மம்தானி: குரலற்றவர்களின் குரல்\u003cbr\u003e● அபூ உபைதா: அடையாளமற்ற அபாயம்\u003cbr\u003e● தோழரோடு ஒரு பொழுது!\u003c\/p\u003e\n\u003cp\u003eபுனைவுகள்\u003cbr\u003e● கல்லறையை உள்ளிருந்து திறக்க முடியாது (சிறுகதை)\u003cbr\u003e● பகைநன்று (குறுநாவல்)\u003cbr\u003e● உலகின் கடைசி மனிதன் (குறுநாவல்)\u003cbr\u003e● கதையின் தலைப்பை யூகித்துக் கொள்ளுங்கள் (சிறுகதை)\u003cbr\u003e● காணாமல் போனவர்களின் ரகசிய உலகம் (சிறுகதை)\u003c\/p\u003e\n\u003cp\u003eமொழிபெயர்ப்பு\u003cbr\u003e● தயவுசெய்து சுட்டுக் கொன்றுவிடு (பாலஸ்தீன சிறுகதைகள்)\u003cbr\u003e● வெறுப்புப் பேச்சால் தூண்டப்படும் இஸ்லாமோஃபோபியா (CSOH அறிக்கை)\u003c\/p\u003e","products":[{"product_id":"கதையின்-தலைப்பை-யூகித்துக்-கொள்ளுங்கள்","title":"கதையின் தலைப்பை யூகித்துக் கொள்ளுங்கள்","description":"\u003cdiv class=\"gmail_default\"\u003e\n\u003cdiv class=\"gmail_default\"\u003e\n\u003cdiv class=\"x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a\"\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003eதேர்தல் அமைப்பு மூலம் சர்வாதிகாரப் போக்கு கொண்டவர்கள் ஆட்சிக் கட்டிலில் அமரும் கெடுவாய்ப்பு உருவாகியுள்ளதால், ‘ஜனநாயகம்’ என்ற தத்துவத்தின் நம்பகத்தன்மை குறித்த விவாதம் சர்வதேச அரங்கில் மேலெழுந்துள்ளது.\u003c\/div\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003e\u003cbr\u003e\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv class=\"x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a\"\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003eஜனநாயகத்தின் நான்காவது தூணான ஊடகங்கள், சர்வாதிகாரிகள் ஆட்சியில் அமர உறுதுணையாக இருக்கும் காலக்கட்டதில் நாம் வாழ்ந்து வருகிறோம்.\u003c\/div\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003e\u003cbr\u003e\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv class=\"x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a\"\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003eஇந்தத் தொகுப்பின் பெரும்பாலான கதைகள் ஊடகத்துறை சார்ந்தவை. பரபரப்பு, வைரல், டிரெண்டிங், ரேட்டிங் செய்திகளை உருவாக்கும் பெருந் தொழிற்சாலைக்குள் உள்ள மனிதர்களின் மனப்போக்குகள், நடத்தைகள், செயல்பாடுகள், அனுபவங்கள் சார்ந்தவை.\u003c\/div\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003e\u003cbr\u003e\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv class=\"x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a\"\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003eஇக்கதைகள், நம்மை வந்தடையும் செய்திகளை உருவாக்குகிறவர்களைப் பற்றிய செய்திகள் அல்ல. ஒவ்வாமை, சமரசம், துரோகம், வெற்றிக் களிப்பு, தாழ்வெண்ணம், மனநிறைவு, உழைப்பு, அங்கீகாரம், நிராகரிப்பு, போலித்தனம் ஆகியவற்றின் கூட்டுருக்களாக வரும் இவர்களது கதைக்குள் நாம் நம்மையும் காண நேர்கிறது.\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv class=\"x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a\"\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003eபுனைவுகளை விடவும் புதிர்த் தன்மைகள் நிறைந்த நடப்புண்மைகளைப் பின் தொடர்வதனால், இதோ இந்த இடத்தில், இந்த நொடியில் நிகழும்போதே எழுதப்பட்ட கதைகள் இவை.\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv class=\"gmail_default\"\u003e\n\u003cspan\u003e\u003c\/span\u003e\u003cbr\u003e\n\u003c\/div\u003e\n\u003cp\u003eAuthor: \u003cspan\u003eமால்கம்\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eGenre: \u003cspan\u003eசிறுகதைகள்\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eLanguage: தமிழ்\u003c\/p\u003e\n\u003cp\u003eType: Paperback \u003c\/p\u003e\n\u003cp\u003eISBN: \u003cspan\u003e9789348598981\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Ethir Veliyeedu","offers":[{"title":"Default Title","offer_id":45411517497498,"sku":"","price":180.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0614\/9003\/6890\/files\/KathaiyinThalaipai.jpg?v=1735041582"},{"product_id":"என்-புரட்சி-malcom-x","title":"என் புரட்சி:  Malcolm X","description":"\u003cdiv\u003e\n\u003cp\u003eவெள்ளளை\u003cbr\u003eஇனவெறிக்கு எதிராக\u003cbr\u003eபுரட்சியாளர் மால்கம் X\u003cbr\u003eநடத்திய போராட்டத்ததை\u003cbr\u003eஅவருடைய பிரபலமான\u003cbr\u003eஉரைகளோடு அமெரிக்க சமூக,\u003cbr\u003eஅரசியல், பொருளாதார, நவீன\u003cbr\u003eகாலனியாதிக்க பின்புலத்துடன்\u003cbr\u003eவிவரிக்கும் Bio Fiction\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv class=\"x14z9mp xat24cr x1lziwak x1vvkbs xtlvy1s x126k92a\"\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003e\n\u003cspan\u003e\u003c\/span\u003e\u003cbr\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eAuthor:\u003c\/strong\u003e S. காஜா குதுப்தீன்\u003cbr\u003e\u003cbr\u003e\u003cstrong\u003eGenre\u003c\/strong\u003e: தன் வரலாறு\u003cbr\u003e\u003cbr\u003e\u003cstrong\u003eLanguage\u003c\/strong\u003e: தமிழ்\u003cbr\u003e\u003cbr\u003e\u003cstrong\u003eType: \u003c\/strong\u003ePaperback\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eISBN\u003c\/strong\u003e: \u003cspan\u003e9789348598950\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Ethir Veliyeedu","offers":[{"title":"Default Title","offer_id":45920441565338,"sku":null,"price":855.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0614\/9003\/6890\/files\/EnPuratchi..jpg?v=1751718158"},{"product_id":"தயவுசெய்து-சுட்டுக்-கொன்றுவிடு","title":"தயவுசெய்து சுட்டுக் கொன்றுவிடு","description":"\u003cdiv class=\"x14z9mp xat24cr x1lziwak x1vvkbs xtlvy1s x126k92a\"\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003eமாபெரும் சிறை\u003c\/div\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003eமாபெரும் மயானம்\u003c\/div\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003eமாபெரும் மருத்துவமனை\u003c\/div\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003eமூன்றும் ஒருங்கே அமைந்த நிலத்தின் கதைகள்\u003c\/div\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003e\u003cbr\u003e\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv class=\"x14z9mp xat24cr x1lziwak x1vvkbs xtlvy1s x126k92a\"\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003eதேச ஆக்கிரமிப்பு, மனை - வீடு - வேளாண்மை நிலம் - கால்நடைகள் - மரங்கள் அபகரிப்பு, புலம்பெயர்ந்து அகதிகளாக வாழ்தல், இஸ்ரேல் இராணுவத்தின் பயங்கரவாதத் தாக்குதல், மரணம், போதிய மருத்துவ வசதி கிடைக்காத துயரம், பட்டினி இவ்வளவையும் உலகுக்குத் தெரியப்படுத்த, ஆங்கிலத்தில் எழுதக் கற்றுக்கொண்ட காஸா இளம் பெண்களின் படைப்புகள்தான் இவை. ஆனால் அவர்கள் எழுதுவதற்கு இதுவல்ல பிரதானக் காரணம்.\u003c\/div\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003e\u003cbr\u003e\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv class=\"x14z9mp xat24cr x1lziwak x1vvkbs xtlvy1s x126k92a\"\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003e‘பாலஸ்தீன்’ என்றொரு நாடு இருந்தது. அதை ஆக்கிரமித்தே ‘இஸ்ரேல்’ என்றொரு நாடு உருவாக்கப்பட்டது என்பதைச் சர்வதேசச் சமூகத்திற்கு நினைவூட்டிக் கொண்டிருக்கவே எழுதுகிறார்கள். வலியும் மரணமும் எவ்வளவுதான் தொடர்ந்தாலும் இஸ்ரேல் முன் மண்டியிட மாட்டோம் என காஸா உறுதியாக இருப்பதை மையச் சரடாகக் கொண்டிருக்கின்றன இந்தக் கதைகள். மட்டுமல்ல, இஸ்ரேல் இராணுவ வீரர்களின் சிதைந்த உளவியல் கூறுகளையும்கூட படம்பிடித்துக் காட்டுறது.\u003c\/div\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003e\u003cbr\u003e\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv class=\"x14z9mp xat24cr x1lziwak x1vvkbs xtlvy1s x126k92a\"\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003eபாலஸ்தீனியர்களின் அவலங்களைச் சர்வதேசச் சமூகத்திற்குச் சொல்ல ஏன் சிறுகதை வடிவத்தைத் தேர்ந்தெடுத்தனர்?\u003c\/div\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003e\u003cbr\u003e\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv class=\"x14z9mp xat24cr x1lziwak x1vvkbs xtlvy1s x126k92a\"\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003eஏனெனில், கதை சொல்வது பாலஸ்தீனிய தேசிய அடையாளத்தையும் ஒற்றுமையையும் கட்டமைக்க உதவுகிறது. ஏனெனில், மீட்கப்பட வேண்டிய ஒரு பாலஸ்தீனம் உள்ளது, தற்போதைக்குப் பிரதிகளினூடாக. ஏனெனில், பாலஸ்தீன் ஒரு சிறுகதையின் நீளத்தில் உள்ளது. கற்பனையின் சக்தி ஒரு புதிய உண்மையைக் கட்டமைப்பதற்கான ஆக்கப்பூர்வமான வழியாகும். ஏனெனில், எழுதுவது ஒரு தேசியக் கடமை, மனித குலத்திற்கான கடமை, மேலும் அது ஒரு தார்மீகப் பொறுப்பு.\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e\n\u003cp\u003eCompiled And Translated by: \u003cspan\u003eமால்கம்\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eGenre: \u003cspan\u003eபாலஸ்தீன\u003c\/span\u003e\u003cspan\u003eச் சிறுகதைகள்\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eLanguage: தமிழ்\u003c\/p\u003e\n\u003cp\u003eType: Paperback\u003c\/p\u003e\n\u003cp\u003eISBN: \u003cspan\u003e9789375773832\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Ethir Veliyeedu","offers":[{"title":"Default Title","offer_id":46953539928218,"sku":null,"price":180.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0614\/9003\/6890\/files\/PLASTAIN.jpg?v=1767084913"}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0614\/9003\/6890\/collections\/Qudupudeen.jpg?v=1785830820","url":"https:\/\/ethirveliyeedu.com\/collections\/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d.oembed","provider":"Ethir Veliyeedu","version":"1.0","type":"link"}