{"title":"மஞ்சுநாத்","description":"\u003cp\u003e\u003cimg src=\"https:\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0614\/9003\/6890\/files\/Manjunath.jpg?v=1786799624\" alt=\"\" width=\"144\" height=\"145\"\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eதீவிர வாசிப்பாளர், விமர்சகர்,பயணி, வரலாற்று ஆய்வாளர், சித்த மருத்துவத்தின் மருந்து செய்யும் கலையில் திறன் பெற்றவர், புதுச்சேரி அரசின் ஆயுஷ் துறையில் மூத்த சித்த மருத்துவ மருந்தாளுநர்.\u003c\/p\u003e\n\u003cp\u003eகுதிரைக்காரனின் புத்தகம், உடனுறை இடாகினி ஆகிய சிறுகதைத் தொகுப்புகளும், டால்ஸ்டாயின் மூன்று கண்கள் கட்டுரைத் தொகுப்பும் வெளிவந்துள்ளன. அப்பன் திருவடி முதல் நாவல்.\u003c\/p\u003e","products":[{"product_id":"உடனுறை-இடாகினி","title":"உடனுறை இடாகினி","description":"\u003cp\u003eமஞ்சுநாத் இமயமலையில் பலமுறை பயணம் செய்தவர். இனிமேலும் செய்யப்போகிறவர். பனி போர்த்திய மலையும் செடிகொடிகளும் மரங்களும் படர்ந்த மலையும் பெளதிக இடங்களாகவும் உருவகங்களாகவும் அவர் கதைகளில் விரவிக்கிடக்கின்றன. ஒன்றைத் தொட்டால் இன்னொன்றினுள் இழுத்துப்போகும் விசைகளாகச் சில கதைகள்; ஒரு பாதையில் நுழைந்ததும் புதிர்ப்பாதைகளாக எங்கேங்கோ கூட்டிச் செல்லும் கதைகள்; கரிக்குருவிகளின் கீச்சொலிகளாகவும் வாசங்களாகவும் உயிர்களை விழுங்கும் மலைப்பாம்பாகவும் உணர்வுகளையும் உயிர் பறிக்கும் நினைவுகளையும் தாங்கிவரும் கதைகள்; இடாகினிகளும் உண்டு; கால்நடைகளுக்குப் போடுவதுபோல் இடாகு போடுதலும் உண்டு; அங்கங்கே இடார்களும் உண்டு. ஆனால் எல்லாக் கதைகளின் பின்னாலும் ஒலித்துக்கொண்டே இருப்பது சுருதி பிசகாத இடாயம்.\u003c\/p\u003e\n\u003cp\u003e- \u003cem\u003eஅம்பை\u003c\/em\u003e\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eAuthor\u003c\/strong\u003e: மஞ்சுநாத்\u003cbr\u003e\u003cbr\u003e\u003cstrong\u003eGenre\u003c\/strong\u003e: சிறுகதைகள்\u003cbr\u003e\u003cbr\u003e\u003cstrong\u003eLanguage\u003c\/strong\u003e: தமிழ்\u003cbr\u003e\u003cbr\u003e\u003cstrong\u003eType:\u003c\/strong\u003e Paperback\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003e\u003cstrong\u003eISBN\u003c\/strong\u003e: 9788119576388\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003c!----\u003e","brand":"Ethir Veliyeedu","offers":[{"title":"Default Title","offer_id":45178934886554,"sku":"","price":225.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0614\/9003\/6890\/files\/Udanurai.jpg?v=1723644761"},{"product_id":"அப்பன்-திருவடி","title":"அப்பன் திருவடி","description":"\u003cdiv\u003e\n\u003cdiv class=\"gmail_default\"\u003e\n\u003cdiv\u003e\n\u003cdiv class=\"gmail_default\"\u003e\n\u003cp\u003eமேகவெடிப்பாக, கனமழையாக, கடும் பனிப்பொழிவாக, பெருவெள்ளமாக உருவெடுத்து மரணம் அனைத்தையும் அழித்தொழித்த இரண்டு நாட்கள் கேதாரத்தில் நடந்த நிகழ்வுகளை விவரிக்கிறது இந்த நாவல். இமயத்தைப் பின்புலமாகக் கொண்டு எழுதப்பட்டிருக்கிறது என்பதோடு இவ்வாறான ஓர் இயற்கைப் பேரிடரின் நிகழ் கணங்களில் மனிதன் கொள்ளும் அச்சத்தையும் நம்பிக்கை இழப்பையும் அதே சமயத்தில் உயிர்வாழும் இச்சையுடன் தொடர்ந்து மேற்கொள்ளும் போராட்டத்தையும் சித்தரித்துள்ளது என்ற வகையில் தமிழுக்கு இந்த நாவல் புதியதொரு களத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.\u003c\/p\u003e\n\u003cp\u003eஎம். கோபாலகிருஷ்ணன்\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv class=\"gmail_default\"\u003e\u003cbr\u003e\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv class=\"x14z9mp xat24cr x1lziwak x1vvkbs xtlvy1s x126k92a\"\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003e\n\u003cspan\u003e\u003c\/span\u003e\u003cbr\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eAuthor:\u003c\/strong\u003e மஞ்சுநாத்  \u003cbr\u003e\u003cbr\u003e\u003cstrong\u003eGenre\u003c\/strong\u003e: நாவல்\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003cstrong\u003eLanguage\u003c\/strong\u003e: தமிழ்\u003cbr\u003e\u003cbr\u003e\u003cstrong\u003eType: \u003c\/strong\u003ePaperback\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eISBN\u003c\/strong\u003e: 9789348598974\u003cbr\u003e\u003c\/p\u003e","brand":"Ethir Veliyeedu","offers":[{"title":"Default Title","offer_id":46047275942042,"sku":null,"price":337.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0614\/9003\/6890\/files\/Appan.jpg?v=1755178532"}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0614\/9003\/6890\/collections\/Manjunath.jpg?v=1786799786","url":"https:\/\/ethirveliyeedu.com\/collections\/%e0%ae%ae%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%af%81%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a4%e0%af%8d.oembed","provider":"Ethir Veliyeedu","version":"1.0","type":"link"}