{"title":"பூவிதழ் உமேஷ்","description":"\u003cp\u003e\u003cimg src=\"https:\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0614\/9003\/6890\/files\/Poovithal_Umesh.jpg?v=1785916867\" alt=\"\" width=\"124\" height=\"137\"\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eதருமபுரி மாவட்டத்தில் நவலை என்ற சிற்றூரில் பிறந்தவர். அரசுப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிகிறார். தமிழ், ஆங்கிலத்தில் கவிதைகள் எழுதுவதோடு சிறார்களுக்காகவும் எழுதுகிறார். இவருடைய கவிதைகள் ஆங்கிலம், பல்கேரியன், ஸ்பானிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு இதழ்களில் வந்துள்ளன\/வரவுள்ளன. மனைவி சுமதி, குழந்தைகள் பூவிதழ் சேகுவேரா, தூயநிலா ஓவியம். தற்போது மொரப்பூரில் வசிக்கிறார்.\u003c\/p\u003e\n\u003cp\u003eசௌமா இலக்கிய விருது. படித்துறை இலக்கிய விருது, திருப்பூர் இலக்கிய விருது, தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கியமேடை விருது, புன்னகை இலக்கிய விருது, எழுச்சித் தமிழர் இலக்கிய விருது, பிரமிள் கவிதை விருது (இலங்கை), தினைகள் கவிதை விருது, ஜெ. பிரான்சிஸ் கிருபா கவிதை விருது (துளிர்) ஆகிய விருதுகள் பெற்றுள்ளார்.\u003c\/p\u003e","products":[{"product_id":"துரிஞ்சி","title":"துரிஞ்சி","description":"\u003cp data-mce-fragment=\"1\"\u003eபுறக் கண்ணால் பார்த்தவற்றைக் கவனமாக மறந்துவிட்டு, அகக் கண்ணால் மீண்டும் அவற்றைப் பார்த்து, நெஞ்சுக்குள் கண்டவற்றைக் கவிதையாக எழுதுகிறார் பூவிதழ் உமேஷ். தியானத்தில் இருக்கும் துறவி, யாரும் திறக்கவியலாத அளவுக்குச் சிறிது கண்திறந்து பார்க்கும் செயலைப் போன்றது. அதனால்தான் இந்தக் கவிதைகளில் யூகிக்கவியலாத அடுத்தடுத்த வரிகள் வந்து விழுகின்றன. சாமைத் தாளடிக் கூலத்தில் கௌதாரி முட்டைகளும் இருக்கும்; பாம்பு முட்டைகளும் இருக்குமே அப்படி. சொல்லியவற்றின் சொல்லப்படாத பகுதியைப் பேசும் இந்தக் கவிதைகள், மூலவருக்குப் பதிலாக உற்சவர் வீதியுலா வருவதைப் போன்ற தோற்றம் கொண்டவை. அதாவது 'அகங்கை கொண்டு புறங்கையை எழுதிப் பார்ப்பதைப் போல' என்று புதுமைப்பித்தனை பிரபஞ்சன் இப்படித்தான் சொல்வார். தமிழ் முகம் காட்டும் புதுமுகக் கவிதைகள் இவை.\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003e- \u003cem\u003eகதிர்பாரதி\u003c\/em\u003e\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003e\u003cstrong data-mce-fragment=\"1\"\u003e\u003cbr\u003eAuthor\u003c\/strong\u003e:\u003cspan data-mce-fragment=\"1\"\u003e பூவிதழ் உமேஷ்\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e\u003cstrong data-mce-fragment=\"1\"\u003e\u003c\/strong\u003e\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e\u003cstrong data-mce-fragment=\"1\"\u003eGenre\u003c\/strong\u003e: கவிதைகள்\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e\u003cstrong data-mce-fragment=\"1\"\u003eLanguage\u003c\/strong\u003e: தமிழ்\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e\u003cstrong data-mce-fragment=\"1\"\u003eType\u003c\/strong\u003e: Paperback\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Ethir Veliyeedu","offers":[{"title":"Default Title","offer_id":42960367419546,"sku":"","price":135.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0614\/9003\/6890\/products\/Thurinchi.jpg?v=1672145439"},{"product_id":"எழுத்தெனப்படுவது-புதிய-நோக்கில்-இலக்கணம்","title":"எழுத்தெனப்படுவது:  புதிய நோக்கில் இலக்கணம்","description":"\u003cp data-mce-fragment=\"1\"\u003e \u003c\/p\u003e\n\u003cdiv class=\"x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a\"\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003eதமிழில் உள்ள மயங்கொலி எழுத்துக்கள் சொற்களில் எப்படி வருகின்றன என்ற பூவிதழ் உமேஷின் இந்த ஆய்வு புதிய இலக்கணம் ஒன்றை உருவாக்குகிறது. அதை அவர் சொல்லும் விதம், கைக்கொள்ளும் பொருள்கள், தகவல்கள் எல்லாம் இதற்கு முன்பு எழுதப்பட்ட மொழி சார்ந்த எல்லா நூல்களிலிருந்தும் மாறுபட்டு தனித்துவமாக இருக்கின்றன. ஒற்றுமிகும் இடங்களை அறிய இவர் தரும் கற்றல் முறை புதுமையாக இருக்கிறது. மொழியைக் கவித்துவத்தோடு அணுகும் கவிஞனாக இருப்பதால் இவற்றை அழகியல் பூர்வமான ஒரு பொருளாக மாற்றும் முயற்சியில் வெற்றி பெற்றுள்ளது, இலக்கணம் சார்ந்த நூலை இப்படியும் எழுத முடியுமா என்று நம்மை வியக்க வைக்கிறார். எழுத்தாளர் பூவிதழ் உமேஷின் எழுத்தெனப்படுவது என்னும் இந்நூல் தமிழுக்கு வாய்த்த பெருமைகளில் ஒன்றாக மாறக்கூடும் என்பதை காலம் உணர்த்தும் என்று நான் நம்புகிறேன்.\u003c\/div\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003e\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv class=\"x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a\"\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003e- \u003cem\u003eமௌனன் யாத்ரிகா\u003c\/em\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003e \u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003e\u003cstrong data-mce-fragment=\"1\"\u003eAuthor\u003c\/strong\u003e:\u003cspan data-mce-fragment=\"1\"\u003e பூவிதழ் உமேஷ்\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e\u003cstrong data-mce-fragment=\"1\"\u003e\u003c\/strong\u003e\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e\u003cstrong data-mce-fragment=\"1\"\u003eGenre\u003c\/strong\u003e: கட்டுரைகள் \/ மொழியியல்\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e\u003cstrong data-mce-fragment=\"1\"\u003eLanguage\u003c\/strong\u003e: தமிழ்\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e\u003cstrong data-mce-fragment=\"1\"\u003eType\u003c\/strong\u003e: Paperback\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Ethir Veliyeedu","offers":[{"title":"Default Title","offer_id":44260292984986,"sku":"","price":135.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0614\/9003\/6890\/files\/654047a2b049056458f31909c9fc473e.jpg?v=1703490543"},{"product_id":"தண்ணீரின்-சிரிப்பு","title":"தண்ணீரின் சிரிப்பு","description":"\u003cp data-mce-fragment=\"1\"\u003e \u003c\/p\u003e\n\u003cp\u003eபூவிதழ் உமேஷின் அஃபோரிசக் கவிதைகள் பார்க்க சிறியவை போல தோற்றம் தருவது ஒருவித மயக்கம். வின்சென்ட் வான்கோ சொல்வதுபோல ‘சிறிய விசயங்களால் இணைக்கப்பட்ட தொடரால் செய்யப்படுபவைதான் பெரிய விசயங்கள்.’ இந்தக் கவிதைகள் அதைத் தான் செய்கின்றன. திரும்பத் திரும்ப முக்கியமில்லாத வேலைகளை செய்வதின் சோர்விலிருந்து தப்பிக்கும் உபாயத்தை உமேஷ் அறிந்திருக்கிறார். இந்தக் கவிதைகள் ஒரு தியானம் போல இருக்கின்றன. மனதின் அமைதியான இடங்களில், சிறிய சொற்களை வெடிக்க வைத்து கடவுளின் இருப்பை அனுபவிக்கிற பரவசத்தைத் தருகின்றன. ‘தண்ணீரின் சிரிப்பு’ தொகுப்பின் மூலம் தமிழுக்கு ஒரு புதிய வடிவத்தைத் அளித்திருக்கிறார். ‘உங்கள் இதயம் எனக்கு ஒரு பள்ளத்தாக்கு’ எனக்கூறும் பூவிதழ் உமேஷை இதயத்தில் நிரப்பிக் கொள்வோம்.\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan style=\"color: #ff8000;\" data-mce-fragment=\"1\" data-mce-style=\"color: #ff8000;\"\u003e\u003cbr\u003e-\u003cspan style=\"color: #000000;\"\u003e\u003cem\u003eகவிஞர் கரிகாலன்\u003c\/em\u003e\u003c\/span\u003e\u003cbr\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003e\u003cstrong data-mce-fragment=\"1\"\u003eAuthor\u003c\/strong\u003e:\u003cspan data-mce-fragment=\"1\"\u003e பூவிதழ் உமேஷ்\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e\u003cstrong data-mce-fragment=\"1\"\u003e\u003c\/strong\u003e\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e\u003cstrong data-mce-fragment=\"1\"\u003eGenre\u003c\/strong\u003e: கவிதை\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e\u003cstrong data-mce-fragment=\"1\"\u003eLanguage\u003c\/strong\u003e: தமிழ்\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e\u003cstrong data-mce-fragment=\"1\"\u003eType\u003c\/strong\u003e: Paperback\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Ethir Veliyeedu","offers":[{"title":"Default Title","offer_id":44260301045914,"sku":"","price":135.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0614\/9003\/6890\/files\/303c911c6c953535ce349f64313b5d20.jpg?v=1703491205"},{"product_id":"மற்ற-விலங்குகள்","title":"மற்ற விலங்குகள்","description":"\u003cdiv class=\"gmail_default\"\u003e\n\u003cdiv class=\"gmail_default\"\u003e\n\u003cdiv class=\"x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a\"\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003eகாகிதக் கப்பல் ஒன்றைச் செய்த சிறுமி அதைக் காற்றில் மிதக்கச் செய்து, இதுதான் கடல் என் கப்பல் மிதக்குது பார் என பார்ப்பவர்களிடம் சொல்வாள். அங்கு உண்மையாகக் கடலும் கப்பலும் இருப்பதையும், அங்கு எதுவுமே இல்லாது போவதையும் மொழியால் நிகழ்த்திக்காட்ட முடியும். பூவிதழ் உமேஷ் இதை வெகு லாகவமாக கவிதைகளில் செயல்படுத்துகிறார்.\u003c\/div\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003e\u003cbr\u003e\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv class=\"x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a\"\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003eதொடர்ந்து தன் தொகுப்புகளில் வெவ்வேறான மாற்றங்களை, பரிசோதனைகளை நிகழ்த்தி மொழியை அழகு படுத்தும் முயற்சி செய்கிறார் .\u003c\/div\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003e\u003cbr\u003e\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv class=\"x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a\"\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003eகுளத்தை மேசையாக்கி கல் பழம் உண்ணச் செய்கிறார். உடல் எங்கும் வாய் முளைக்கச் செய்து எதையும் விளைவிக்கும் நிலமாக்குகிறார். தற்கொலை செய்ய நினைக்கும் யானையை அறிமுகப்படுத்துகிறார். தூங்கும் கல் ஒன்றை நம் கைகளில் தருகிறார். பறவையின் நடனம் போல் பேசுபவனைக் காட்டுகிறார்.\u003c\/div\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003e\u003cbr\u003e\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv class=\"x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a\"\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003eஇத்தொகுப்பை வாசிப்போருக்கு அற்புத மலர்கள் சேகரமாகிக்கொண்டே இருக்கும். அந்த மலர்களை ஒரு குளத்தில் விட நட்சத்திரமாகும். கவிதையில் எதுவும் சாத்தியம் என்பதை பூவிதழ் உமேஷின் கவிதைகள் வழக்கம் போல இத்தொகுப்பிலும் நிரூபணம் செய்கின்றன.\u003c\/div\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003e\u003cbr\u003e\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv class=\"x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a\"\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003e- \u003cem\u003eந. பெரியசாமி\u003c\/em\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv class=\"gmail_default\"\u003e\n\u003cspan\u003e\u003c\/span\u003e\u003cbr\u003e\n\u003c\/div\u003e\n\u003cp\u003eAuthor: \u003cspan\u003eபூவிதழ் உமேஷ் \u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eGenre: \u003cspan\u003eகவிதை\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eLanguage: தமிழ்\u003c\/p\u003e\n\u003cp\u003eType: Paperback \u003c\/p\u003e\n\u003cp\u003eISBN: \u003cspan\u003e9789348598219\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Ethir Veliyeedu","offers":[{"title":"Default Title","offer_id":45412307075226,"sku":"","price":135.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0614\/9003\/6890\/files\/MatraVilankukal.jpg?v=1735106494"},{"product_id":"பூமி-எங்கும்-கால்கள்","title":"பூமி எங்கும் கால்கள்","description":"\u003cdiv class=\"x14z9mp xat24cr x1lziwak x1vvkbs xtlvy1s x126k92a\"\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003e\n\u003cdiv class=\"x14z9mp xat24cr x1lziwak x1vvkbs xtlvy1s x126k92a\"\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003e\n\u003cdiv\u003e\n\u003cdiv class=\"gmail_default\"\u003e\n\u003cdiv class=\"gmail_default\"\u003e\u003cspan\u003eகுழந்தைகளுக்குக் கதை சொல்வதுதான் மிகவும் கடினமான விஷயம். படிக்கத் தூண்டும் வகையில் கதைக் களத்தை அமைத்து அதைச் சுவாரசியம் குறையாமல் நகர்த்திச் செல்லும் வகையில்  சமகாலத்தில் தமிழில் எழுதப்பட்ட மிகச்சிறந்த  ஃபேன்டசி கதை என்று இந்நூலை உறுதியாகச் சொல்லலாம்.  ஒவ்வொரு அத்தியாயம் முடியும்போதும் அடுத்து என்ன நடக்கும் என்று கதையை விட்டு நகரவிடாமல் செய்யும் மாயாஜாலத்தைத் தன் கதை சொல்லும் திறமையில் ஒளித்து வைத்திருக்கிறார் பூவிதழ் உமேஷ். அவரின் குழந்தைகளுக்கான மற்ற நூல்களைப் போலவே இந்த நூலும் தனித்துவமாக எழுதப்பட்டுள்ளது.\u003c\/span\u003e\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv class=\"gmail_default\"\u003e\u003cbr\u003e\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e\n\u003cp\u003eAuthor: \u003cspan\u003eபூவிதழ் உமேஷ்\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eGenre: சிறார் நாவல்\u003c\/p\u003e\n\u003cp\u003eLanguage: தமிழ்\u003c\/p\u003e\n\u003cp\u003eType: Paperback\u003c\/p\u003e\n\u003cp\u003eISBN: \u003cspan\u003e97893\u003c\/span\u003e\u003cspan class=\"gmail_default\"\u003e7577\u003c\/span\u003e\u003cspan\u003e3061\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Magic Lamp","offers":[{"title":"Default Title","offer_id":46972342370458,"sku":null,"price":162.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0614\/9003\/6890\/files\/BOOMI.jpg?v=1767447672"}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0614\/9003\/6890\/collections\/Poovithal_Umesh.jpg?v=1785917002","url":"https:\/\/ethirveliyeedu.com\/collections\/%e0%ae%aa%e0%af%82%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%89%e0%ae%ae%e0%af%87%e0%ae%b7%e0%af%8d.oembed","provider":"Ethir Veliyeedu","version":"1.0","type":"link"}