{"title":"பிரபு தர்மராஜ்","description":"\u003cp\u003eபிரபு தர்மராஜ் \u003c\/p\u003e\n\u003cp\u003eகன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பிறந்தார். இளங்கலை காட்சித் தொடர்பியல் பட்டம் பெற்ற இவர் இதற்கு முன்னர் அரேபியாவுக்குப் போன தீக்கொளுத்தி ஆவரான் என்ற குறுநாவல், ஆதிகுடி மக்களும் ஆல்கஹாலும், ழ் மற்றும் கோலப்பனின் அடவுகள் ஆகிய மூன்று சிறுகதைத் தொகுப்புகளையும், கசவாளி காவியம் மற்றும் ராணி இல்லம் என்னும் இரண்டு நாவல்களையும், சக்ரவர்த்தி திரையரங்கம் என்னும் சினிமா விமர்சன புத்தகத்தையும், களிறும் பிடியும் பின்னே ஞானும் என்னும் கவிதைத் தொகுப்பையும் எழுதியிருக்கின்றார். ஆனால் இதுவரையிலும் இலக்கியத்துக்காக எந்தவொரு விருதுகளையும் இவர் பெறவில்லை...\u003c\/p\u003e","products":[{"product_id":"ச்சூ-காக்கா","title":"ச்சூ காக்கா","description":"\u003cp\u003eநாமெல்லோரும் ஒருவகையில் பாவனை நடிகர்கள். அழும் முகமூடியையும் சிரிக்கும் முகமூடியையும் அவரவர் சௌகரியங்களுக்கும் சந்தர்ப்பங்களுக்கும் பயன்படுத்திக் கொள்கிறோம். சமகாலம் முகமூடிகளையே முகமாக்கிவிட்டது. பிரபுவின் கதைகள் இந்த மூடிகளைச் சற்றேத் திறந்து மூச்சுவிட வைக்கின்றது...\u003c\/p\u003e\n\u003cp\u003eகருப்புநகைச்சுவை,நீல நகைச்சுவை எள்ளல், சுய, அரசியல், பகடி என எல்லா வகைகளும் பிரபுவின் எழுத்தில் கூடிவந்தாலும் உள்ளூர அதிலொரு சோகமும் அவ்வப்போது இழையோடும்... இருட்டில் சிறிது வெளிச்சத்தைப் பாய்ச்சுவதே அவல நகைச்சுவைகளின் நோக்கம். துயரச் சம்பவங்களுக்கும் தடைசெய்யப்பட்டத் தகவுகளுக்கும் அவை ஒளியூட்டுகின்றன.\u003c\/p\u003e\n\u003cp\u003eபிரபுவின் கதைகள் நமக்குள்ளிருக்கும் பாவனையற்ற ஒரு முகத்தை வெளியேக் கொணர்கின்றன ... ஒப்பனைகளை களைந்துவிட்டால் மனிதர்கள் வேறென்ன செய்ய முடியும் சிரிப்பதையோ... அழுவதையோ தவிர... பிரபு அழ வைப்பதில்லை....\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cem\u003eஎழுத்தாளர் எஸ். ஜே. சிவசங்கர்\u003c\/em\u003e\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003e\u003cstrong data-mce-fragment=\"1\"\u003eAuthor\u003c\/strong\u003e:\u003cspan data-mce-fragment=\"1\"\u003e பிரபு தர்மராஜ்\u003cbr\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e\u003cstrong data-mce-fragment=\"1\"\u003e\u003c\/strong\u003e\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e\u003cstrong data-mce-fragment=\"1\"\u003eGenre\u003c\/strong\u003e: சிறுகதைகள் \u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e\u003cstrong data-mce-fragment=\"1\"\u003eLanguage\u003c\/strong\u003e: தமிழ்\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e\u003cstrong data-mce-fragment=\"1\"\u003eType\u003c\/strong\u003e: Paperback\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Ethir Veliyeedu","offers":[{"title":"Default Title","offer_id":42893951893658,"sku":"","price":225.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0614\/9003\/6890\/products\/Soo.jpg?v=1670941162"},{"product_id":"ஜாப்-மார்சியா","title":"ஜாப் மார்சியா","description":"\u003cp data-mce-fragment=\"1\" dir=\"auto\"\u003e \u003c\/p\u003e\n\u003cdiv data-mce-fragment=\"1\" dir=\"auto\"\u003e\u003c\/div\u003e\n\u003cdiv data-mce-fragment=\"1\" dir=\"auto\"\u003e\u003c\/div\u003e\n\u003cdiv data-mce-fragment=\"1\" dir=\"auto\"\u003eஎந்தப் பீடத்தின் முன்னும் மண்டியிடாத பகடிக்காரன்தான் பிரபு. அவனது எள்ளல் எழுத்துக்குச் சமமான எழுத்தைத் தற்காலத் தமிழ்ப்புனைவுகளில் காண்பதரிது... பிரபுவின் எழுத்தில் காணக்கிடைக்கும் கதாபாத்திரங்களுக்கு ஈடான இயல்பான மனிதர்களை உங்களால் மலையாள இலக்கியத்திலும், மலையாளத் திரைப்படங்களிலுமே காண இயலும்! \u003c\/div\u003e\n\u003cdiv data-mce-fragment=\"1\" dir=\"auto\"\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003c\/div\u003e\n\u003cdiv data-mce-fragment=\"1\" dir=\"auto\"\u003eஅதற்காக அவனது எழுத்துகளை வெறும் பகடி வகைமைகளுக்குள் மட்டுமே ஒதுக்கிவிட முடியாது. அழுத்தமான கதைகளையும், அமானுஷ்யமான கதைகளையும் தனித்துவத்தோடு எழுதியிருக்கிறான். பிரபு தர்மராஜ் போன்றவர்கள் ‘நான்தான் கடவுள்’ என்று சொல்லித் திரியும் இலக்கியவாதிகளுக்கு பேயோட்டும் எழுத்து நாத்திக மந்திரவாதிகள் ஆவார்கள். இப்படியொருவனே எழுத்துலகில் இல்லாதது போன்று அந்த இலக்கிய சத்(கு)ருக்கள் கண்ணை மூடிக் கொண்டு கள்ளமெளனம் காப்பார்கள். அதையெல்லாம் எள்ளலோடும், எகத்தாளத்தோடும் கடந்து செல்லும் இலக்கிய உலகில் தவிர்க்கவியலாத ஆளுமை பிரபுதர்மராஜ்... நம்போன்ற வாசகர்கள் இ(வ)தனை முன்னெடுப்போம்...\u003c\/div\u003e\n\u003cdiv data-mce-fragment=\"1\" dir=\"auto\"\u003e\u003c\/div\u003e\n\u003cdiv data-mce-fragment=\"1\" dir=\"auto\"\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eAuthor\u003c\/strong\u003e:\u003cspan\u003e பிரபு தர்மராஜ்\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e\u003cstrong\u003e\u003c\/strong\u003e\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e\u003cstrong\u003eGenre\u003c\/strong\u003e: நாவல் \u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e\u003cstrong\u003eLanguage\u003c\/strong\u003e: தமிழ்\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e\u003cstrong\u003eType\u003c\/strong\u003e: Paperback\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003c\/div\u003e\n\u003cbr\u003e","brand":"Ethir Veliyeedu","offers":[{"title":"Default Title","offer_id":43934873485466,"sku":"","price":225.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0614\/9003\/6890\/files\/JaffMarshiya.jpg?v=1695968069"},{"product_id":"ஆதிக்குடிமக்களும்-ஆல்கஹாலும்","title":"ஆதிக்குடிமக்களும் ஆல்கஹாலும்","description":"\u003cp\u003e\u003cstrong\u003eஆசிரியர் துதி உரை\u003c\/strong\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eபுகைப்படத்தில் நிற்கும் ஆள் ஒரு அசாத்தியமான கை. உலகப்புகழ் பெற்ற புகைப்படக்காரர், ஷெல்லி, பைரவன், வில்லியம் சேகரை விடவும் அதிகமான காதல்கவிதை மடல்களை வரைந்து லட்சக்கணக்கான கன்னியர்களின் இதயத்தில் வாடகை தராமலேயே முப்பத்தைந்து ஆண்டுகளாக குடியிருக்கும் உள்ளம்கவர் கள்வன். தற்புகழ்ச்சியை விரும்பாதவர்.\u003c\/p\u003e\n\u003cp\u003eஉலகில் மிக உயர்ந்த படிப்பான காட்சித் தொடர்பியலை மூன்றே ஆண்டுகளில் படித்து ஒரே மூச்சில் பட்டம் பெற்றார் என்றால் அது மிகையில்லை. கல்வித் தாகம் தணியாமல் குடிக்கத் துவங்கிய முதுகலை அறிவியில் மின்னணு ஊடகவியலை சக மாணவக் கன்னியர்களின் காதல் இம்சை தாளாமல் தியாகம் செய்து, மேலும் கோயமுத்தூரில் கருவாட்டுக் குழம்பு சரியாகக் கிடைக்காத விரக்தியில் தாயகமான நாகர்கோவிலுக்குத் திரும்பினார். இங்கும் கலைத்தாகம் முற்றியதில் முதுகலை ஊடகவியல் படித்துவிட்டு, அதிலுள்ள ஒரே ஒரு பாடமான இந்திய அரசியலமைப்பும், ஊடகச் சட்டங்களும் எனும் தலைப்பு இவரை மிகுந்த துக்கத்தில் ஆழ்த்தியதால், மேற்கூறிய பாடத்தின் தேர்வன்று திரையரங்கில் அமர்ந்து அமர்ந்து தூங்கியதில் தூங்கியதில் முதுகலைப் பட்டம் கைவறிக் கீழே விழுந்தது.\u003c\/p\u003e\n\u003cp\u003e'குடி'யாண்டவர்கள் என்று அன்போடு அழைக்கப்படும் உற்சாகபான மிஞ்சிகளை (பானநேசர்கள்) இந்த அரசுகள் ஒன்றிணைந்து மதுச்சாலைகள் அவர்களுக்கும் பரமண்டலத்துக்குமான இணைப்புப் பாலமொன்றை தொகுதிவாரியாக இணைத்து கட்டி பரமண்டலத்துக்கும் பானப் பயனாளிகளுக்கும் ஒரு நல்லுறவை ஏற்படுத்தி, மேற்கூறிய கனவான்கள் இறைவனடி சேரும் திட்டத்தை அமல்படுத்தியதன் மூலம் மக்கள் தொகை நெருக்கத்தைக் கட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறார்கள்.\u003c\/p\u003e\n\u003cp\u003eஆதிகாலத்திலிருந்தே பானமெனும் அருமருந்தைத் தங்கள் நாவுகளால் தீண்டி, சொர்க்கத்தை அருகில் வரவழைக்கும் மாமனிதர்கள் குறித்த பன்னிரெண்டு சிறுகதைகள் அடங்கிய இந்தப் புத்தகத்தை இவர் தொடர் ஆராய்ச்சிகளின் வாயிலாகக் கண்டறிந்ததாக பி.பி.சி செய்திகளிடம் தெரிவித்தார்.\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eAuthor\u003c\/strong\u003e:\u003cspan\u003e பிரபு தர்மராஜ் \u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e\u003cstrong\u003e\u003c\/strong\u003e\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e\u003cstrong\u003eGenre\u003c\/strong\u003e: சிறுகதைகள் \u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e\u003cstrong\u003eLanguage\u003c\/strong\u003e: தமிழ்\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e\u003cstrong\u003eType\u003c\/strong\u003e: Paperback\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003c!----\u003e","brand":"Ethir Veliyeedu","offers":[{"title":"Default Title","offer_id":44946909855898,"sku":"","price":270.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0614\/9003\/6890\/files\/Aathikudikalum.jpg?v=1716962593"},{"product_id":"கோலப்பனின்-அடவுகள்","title":"கோலப்பனின் அடவுகள்","description":"\u003cp\u003eகோலப்பனின் தோற்றம்\u003c\/p\u003e\n\u003cp\u003eபூமி உருவாவதற்கு முன்பே கோலப்பன் பிறந்து விட்டார். கோலப்பனின் பிறப்பை அண்டப் பெருவெடிப்பில் நிகழ்ந்த ஒரு பித்தவெடிப்பாகவே நாம் பாவிக்க வேண்டும். கோலப்பனின் அக்கா பிறப்பதற்கு முன்பாகவே அவளது மகன் பாப்பச்சன் பிறந்து கோலப்பனை தாய்மாமனாக்கினான் என்பதை இந்த வரலாறு எப்போதும் சொல்லாது. ஆதாமும் ஏவாளும் அதற்குப் பிற்பாடாகவே பிறந்தனர்.\u003c\/p\u003e\n\u003cp\u003e\"கோல் என்பது அதிகாரம், அப்பன் என்றால் சகலத்தையும் படைத்தவன்\" என்பதை ஒரு முறை சொல்லிப் பாருங்கள். கோலப்பனின் தோற்றத்தில் உள்ள பிழைகள் மறைந்து தெளிவு பிறப்பதைக் காண்பீர்கள், கோ என்றால் அரசன், கோமாதா என்றால் பசு, கோயில் என்றால் அரசனின் இல்லம், கோஷ்டி என்றால் பஜனைக் குழு, கோணையன் என்றால் கோலப்பன் என்பதாய் 'கோ' என்று துவங்கும் வார்த்தைகளுடைய பட்டியலின் நீளமானது வெகு சுவாரசியமானவை.\u003c\/p\u003e\n\u003cp\u003eஎல்லா மனிதனுக்குள்ளும் ஒரு கோலப்பன் இருப்பான். எல்லா கோலப்பன்களோடும் ஒரு பாப்பச்சன் இருப்பான். கடவுளும், சாத்தானும் என்ற கோட்பாட்டுக் கோப்பிராயங்களும் இதனுள்தான் அடங்கும். எல்லா மதநூல்களும் நன்மை தீமையென இதைத்தான் எடுத்துரைக்கின்றன. இங்கே கோலப்பனும், பாப்பச்சனும் கடவுளாகவும், சாத்தானாகவும் மாறி மாறி உருவெடுப்பதுதான் மனிதர்கள் பன்னெடுங்காலமாய் ஏறெடுக்கும் கோமாளித்தனங்களின் நீட்சி, இதற்கு நாகரீகம் என்றொரு தெண்டித்தனமான பெயர் வேறு வைக்கப்பட்டிருக்கிறது.\u003c\/p\u003e\n\u003cp\u003eஎது எங்கனமோ உங்களால் கடவுளையோ, சாத்தானையோ, கோலப்பனையோ, பாப்பச்சனையோ கண்களால் காணமுடியாது. மாறாக உணரமுடியும். அதையும் மீறி காண வேண்டுமென்றால் புகைப்படத்தில் இருக்கும் சர்வலோகாதிபரைக் காணுங்கள்! மோட்சம் கிட்டும்.\u003c\/p\u003e\n\u003cp\u003eபாப்பச்சன்\u003c\/p\u003e\n\u003cp\u003e(மருமோன் ஆஃப் கோலப்பன்)\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eAuthor\u003c\/strong\u003e:\u003cspan\u003e பிரபு தர்மராஜ் \u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e\u003cstrong\u003e\u003c\/strong\u003e\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e\u003cstrong\u003eGenre\u003c\/strong\u003e: சிறுகதைகள் \u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e\u003cstrong\u003eLanguage\u003c\/strong\u003e: தமிழ்\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e\u003cstrong\u003eType\u003c\/strong\u003e: Paperback\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003c!----\u003e","brand":"Ethir Veliyeedu","offers":[{"title":"Default Title","offer_id":44946938790042,"sku":"","price":270.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0614\/9003\/6890\/files\/KolappaninAdavukal.jpg?v=1716963035"},{"product_id":"பதினெண்-மேற்கணக்குக்-காதைகள்","title":"பதினெண் மேற்கணக்குக் காதைகள்","description":"\u003cdiv class=\"gmail_default\"\u003e\u003cspan\u003eநான் என்னுடைய பன்னிரண்டாவது புத்தகத்தை என்னுடைய நாற்பத்திரண்டாவது வயதில் வெளியிடுவேன் என்று யாரேனும் பத்து வருடங்களுக்கு முன்னால் கூறியிருப்பார்களேயானால், \"என்னைய பரியாசம் அடிக்கியா கோயிமோன?\" என்பது போன்ற தேன் தடவிய வார்த்தைகளால் தடவி சிறப்பு செய்யப்பட்டிருப்பார்கள். ஆனால் இந்தப் பிரபஞ்சத்தின் கணக்கை யார் கணிப்பது? ‘தேமே’ என்று கேமராவும் கையுமாய் சுற்றித் திரிந்த ஒரு தொட்டியைத் தன் கரங்களுக்குள் இடுக்கிக்கொண்டு, என் கிறுக்கல்களையெல்லாம் உங்களை வாசிக்க வைத்துத் துன்புறுத்தும் இலக்கிய மாதாவை என்ன செய்து விட முடியும்? விதி என்பது வித்யா பாலனின் கண்களை விட ஆழமானது நண்பர்களே..\u003c\/span\u003e\u003c\/div\u003e\n\u003cp\u003e\u003cbr\u003e\u003cspan\u003eஇத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள 12 கதைகளும் நானும் என்னுடைய கோம்பை சகாக்களும் வளர்ந்து, வாழ்ந்து, உருண்டு, ஊடுருவி, தாவி, மண்டையில் உடைப்பெடுத்து, பெகளம் வைத்து, எத்துவாளித்தனங்கள் எய்தி, குத்துகள் வாங்கி இன்று வரை ஜீவித்திருக்கும் குமரி மண்ணின் மைந்தர்களின் கதைகளே. நாம் தினமும் சந்திக்கும் நம்முடன் வாழும் சில சள்ள டாவுகளின் களேபரக் கதைகளும், சில நல்மனம் கொண்ட மனிதர்களின் நன்னெறிக் கதைகளும் இதில் அடக்கம். கில்லர் பில்பாஜி, கிறுக்குக் கிறுதண்டம், கிணுக்கு, பச்சத்தண்ணி ஜான் போன்ற கதாநாயக மற்றும் வில்ல பிம்பங்களுக்குள் பொருந்தாத ஆனால் அதற்கான அனைத்து அம்சங்களும் உடைய கதாபாத்திரங்கள் உங்களுக்கு அருகிலும் உலவிக் கொண்டிருக்கலாம். என்னைப் போலவே உங்கள் வாழ்க்கையிலும் அவர்கள் தாக்கத்தையோ தாக்குதலையோ ஏற்படுத்தியிருக்கலாம். நேரடியாக பதில் தாக்குதல் நிகழ்த்தவியலாத சூழ்நிலைகளும் தமிழில் டைப்பத் தெரிந்த ஒரு கணிப்பொறியும் இத்தகைய புத்தகங்கள் பிறக்கக் காரணமாகின்றன.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003cspan\u003eபி.கு: புத்தகத்தின் தலைப்பைப் பார்த்ததும் 18+ கதைகளை எதிர்பார்த்து கடைவாயில் அமுதொழுக வாங்கும் பிரகஸ்பதிகளுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.  எல்லாம் வல்ல இப்பிரபஞ்சம் அனைவருக்கும் அன்பையே அருளட்டும்.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003cspan\u003eஇப்படிக்கு,\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eவிருதுகளை கௌரவிக்க காத்திருக்கும் மேற்படி நூலின் ஆசிரியர்\u003c\/span\u003e\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eAuthor: பிரபு தர்மராஜ்\u003c\/p\u003e\n\u003cp\u003eGenre: சிறுகதைகள்  \u003c\/p\u003e\n\u003cp\u003eLanguage: தமிழ்\u003c\/p\u003e\n\u003cp\u003eType: Paperback \u003c\/p\u003e\n\u003cp\u003eISBN: \u003cspan\u003e978934859890\u003c\/span\u003e\u003cspan class=\"gmail_default\"\u003e\u003c\/span\u003e\u003cspan\u003e5\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Ethir Veliyeedu","offers":[{"title":"Default Title","offer_id":45402242908314,"sku":"","price":225.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0614\/9003\/6890\/files\/PathinnenMelkanakku.jpg?v=1734507672"}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0614\/9003\/6890\/collections\/Prabhu_Dharmaraj.jpg?v=1785504258","url":"https:\/\/ethirveliyeedu.com\/collections\/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%aa%e0%af%81-%e0%ae%a4%e0%ae%b0%e0%af%8d%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%af%8d.oembed","provider":"Ethir Veliyeedu","version":"1.0","type":"link"}