{"title":"பாலு","description":"\u003cp\u003e\u003cimg src=\"https:\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0614\/9003\/6890\/files\/Balu_4d5d309a-8628-4429-a187-4750232300e9.jpg?v=1785917375\" alt=\"\" width=\"130\" height=\"130\"\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eஇயற்பெயர் பாலகிருஷ்ணன் கருணாநிதி. வைஷ்ணவக் கல்லூரியில் காட்சித் தொடர்பியல் படித்த இவர். தற்போது ஊடகவியலாளராகப் பணிபுரிகிறார். ஆரம்ப நிலை பியானோ கலைஞரான இவர், இதுவரை 'கால வெளியிடை' (2019), 'துயரங்கள் விற்பனைக்கல்ல' (2021), 'சொனாட்டா' (2024) ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.\u003c\/p\u003e","products":[{"product_id":"சொனாட்டா","title":"சொனாட்டா","description":"\u003cp data-mce-fragment=\"1\"\u003e இசைக்கலைஞன் ஒருத்தனின் வாழ்வாய் விரியும் இந்த நாவலில், தனக்குக் கிடைத்த வாழ்வியல் அனுபவங்கள் வழியாக கூர்மையாய் உற்றுக் கவனித்து, தன்னளவில் முடிந்தமட்டிற்கும் நேர்மையாகச் சொல்லி இருக்கிறார் பாலு. மீமனிதனாக தன்னை பாவித்துக்கொண்டு அல்லாடுகிற ஒருத்தனின் கதையாகவும் இது விரிகிறது.\u003c\/p\u003e\n\u003cdiv class=\"x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a\"\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003e\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv class=\"x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a\"\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003eதன்னை அலைக்கழித்த எவற்றில் இருந்தும் தப்பித்து இந்த நாவலின் நாயகன் தொற்றிக்கொண்டு மீண்ட கயிறு, விளையாட்டு என்பது. உடலையும் மனதையும் ஒரே நேர்கோட்டில் வைத்திருக்கிற தியானமென்கிற விளையாட்டைப் பற்றிக் கொண்ட எவரையும் பரந்த அந்த மைதானம் கைவிட்டதே இல்லை.\u003c\/div\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003e\u003c\/div\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003e\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv class=\"x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a\"\u003e\n\u003cp dir=\"auto\"\u003eஇந்த நாவலில் ஒரு வசனம் வரும். “முதல் முறை தொடுகையில் ஆர்வம் வருகிறது என்றால், மகத்துவம் வாத்தியத்தில் இருக்கிறது. ஆயிரமாவது முறை தொடும் போதும் அதுவே வருகிறதென்றால் மகத்துவம் உன்னிடம் இருக்கிறது” என. முதல்முறை ஆர்வத்தோடு இலக்கியம் என்கிற வாத்தியத்தைத் தொட்டு இருக்கிறார் பாலு. ஆயிரமாவது முறை தொடும்போதும் அது அவருள் நீடிக்கட்டும் என அந்தப் பேருண்மையிடம் உள்ளபடியே இறைஞ்சுகிறேன்.\u003c\/p\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003e\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv class=\"x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a\"\u003e\n\u003cp dir=\"auto\"\u003eசொனாட்டா, சிதறுண்ட தலைமுறையின் கண்ணாடிப் பாத்திரம்.\u003c\/p\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv class=\"x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a\"\u003e\n\u003cp dir=\"auto\"\u003e- \u003cem\u003eசரவணன் சந்திரன்\u003c\/em\u003e\u003c\/p\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003e\u003c\/div\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003e\u003c\/div\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003e\u003cstrong data-mce-fragment=\"1\"\u003eAuthor\u003c\/strong\u003e: \u003cspan data-mce-fragment=\"1\"\u003eபாலு\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e\u003cstrong data-mce-fragment=\"1\"\u003e\u003c\/strong\u003e\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e\u003cstrong data-mce-fragment=\"1\"\u003eGenre\u003c\/strong\u003e: நாவல்\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e\u003cstrong data-mce-fragment=\"1\"\u003eLanguage\u003c\/strong\u003e: தமிழ்\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e\u003cstrong data-mce-fragment=\"1\"\u003eType\u003c\/strong\u003e: Paperback\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e","brand":"Ethir Veliyeedu","offers":[{"title":"Default Title","offer_id":44254681825434,"sku":"","price":225.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0614\/9003\/6890\/files\/5c8d1c7b84bbee524e95ff0dfd4bdb74.jpg?v=1703233204"},{"product_id":"ஸ்டேல்மேட்","title":"ஸ்டேல்மேட்","description":"\u003cp\u003eஇளைஞர்கள் தங்களோடு எளிதில் தொடர்புபடுத்திக் கொள்ளக்கூடிய எழுத்துகளோடு நம்பிக்கை தரும் நாவலாக வெளியான ‘சொனாட்டா’வைத் தொடர்ந்து எழுத்தாளர் பாலுவின் அடுத்த நாவலாக வெளிவருகிறது ‘ஸ்டேல்மேட்.’ உளவியல்ரீதியாக வாழ்க்கையையும் சதுரங்கத்தையும் எதிரெதிர் கட்டங்களில் நிறுத்தி எழுத்தாளன் ஆடும் ஆட்டமே இங்கு ‘ஸ்டேல்மேட்’ எனும் நாவலாகப் பரிணமிக்கிறது. தன்னுடைய கனவை நோக்கி சுமன் மேற்கொள்ளும் பயணத்தில் சந்திக்கும் மனிதர்களையும் அனுபவங்களையும் வெகு சுவாரசியமான நாவலாக மாற்றியிருக்கிறார் பாலு. செஸ் விளையாட்டை அறிந்திராதவர்களும் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் இந்நாவல் எழுதப்பட்டுள்ளது.\u003c\/p\u003e\n\u003cul\u003e\n\u003cli\u003e\u003cem\u003eகார்த்திகைப் பாண்டியன்\u003c\/em\u003e\u003c\/li\u003e\n\u003c\/ul\u003e\n\u003cp\u003eAuthor: பாலு\u003c\/p\u003e\n\u003cp\u003eGenre: நாவல்\u003c\/p\u003e\n\u003cp\u003eLanguage: தமிழ்\u003c\/p\u003e\n\u003cp\u003eType: Paperback\u003c\/p\u003e\n\u003cp\u003eISBN: 9789375775713\u003c\/p\u003e","brand":"Ethir Veliyeedu","offers":[{"title":"Default Title","offer_id":46857031319706,"sku":null,"price":135.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0614\/9003\/6890\/files\/Stelmet_1681de48-2cc3-4e22-9906-b13a1670e018.jpg?v=1765085255"}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0614\/9003\/6890\/collections\/Balu_4d5d309a-8628-4429-a187-4750232300e9.jpg?v=1785917486","url":"https:\/\/ethirveliyeedu.com\/collections\/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%af%81.oembed","provider":"Ethir Veliyeedu","version":"1.0","type":"link"}