{"title":"க. அம்சப்ரியா","description":"\u003cp\u003e\u003cimg src=\"https:\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0614\/9003\/6890\/files\/Amsapriya.jpg?v=1786860440\" alt=\"\" width=\"140\" height=\"141\"\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eஅம்சகோபால் முருகன் என்கிற இயற்பெயருடைய க. அம்சப்ரியா பொள்ளாச்சி பில்சின்னாம்பாளையம் சிராமத்தில் வசித்து வருகிறார். சூரியப்பிரசவங்கள் எனகிற முதல் கவிதை தொகுப்பின் வழியே இலக்கிய உலகிற்கு அறிமுகமானார். இதுவரை 27 நூல்கள் வெளிவந்துள்ளன. கவிதையியல், கலவியியல், சூழலியல, சிறாரியல் என்று பன்முகத் தன்மையோடு இயங்கிவரும் இவர் பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் தலைவராகவும், புன்னகை இதழ் ஆசியராகவும், அறிவுச்சோலை கல்வி விழிப்புணர்வு மையத்தின் நிறுவனராகவும் செயலபட்டுவருகிறார். குழந்தைமையைக் கொண்டாடும் இவரது கவிதைகளில் கண்டறிந்த நுட்பத்தின அடிப்படையில் கவிஞர் ப்ரியம் அவர்கள் இவரது குழந்தைமைக் கவிதைகளை 'அதிஸ்சியா சாகபீஸ் கவிதைகள்' என்ற பெயரில் தொகுத்துள்ளார். தமிழ் இந்து நாளிதழ் இவரின் 'பசுமைக கவிதைகளில் ஒரு சூழலியல் பயணம்' என்ற நூலினை அந்த ஆண்டு வெளிவந்த நூல்களில் சிறந்த நூலாக அடையாளப்படுத்தியது.\u003c\/p\u003e\n\u003cp\u003eஇவர் சிற்பி இலக்கிய பரிசு, கவிஞர் மீரா விருது. சௌமா விருது, கம்பம் பாரதி தமிழ் இலக்கிய பேரவையின் பரிசுகள், உலகத் தமிழ்ப்பண்பாட்டு மையத்தின் சிறப்புப் பரிசு, தமிழ்நாடு கல்ல இலக்கியப் பெருமன்றம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கம் உட்பட பல்வேறு அமைப்புகளின் விருதுகளைப் பெற்றுள்ளார். சிறுகதை, கவிதை, சிறார் இலக்கியம், குறுநாவல் என விரிவான களத்தில் இயங்கி வருகிறார்.\u003c\/p\u003e","products":[{"product_id":"கனவின்-இலைகள்","title":"கனவின் இலைகள்","description":"\u003cp\u003e\u003cspan style=\"color: rgb(0, 0, 0);\"\u003eமேற்கொண்டு இந்த வாழ்வை நகர்த்தத் திணறும் மனதிற்கான  தத்துவச் சுடரெனப்  பிரகாசிக்கின்றன இக்கவிதைகள். கனவின் நூலிலையால் அகத்தைப் பிணைத்திருக்கும் இக்காட்சிகள் ஆழ்மனப்பதிவுகளின் சாட்சியங்களாகி, வாழ்வின் பேராழத்திற்கு அழைத்துச் சென்று அதிர்வையும், திகைப்பையும் ஏற்படுத்துகின்றன. உளவியலின் உள்ளர்த்தங்களைத் தேடிப்பயணிக்கும் இப்பயணம் நிகழாதவைகளைக் கனவின் வழி நிகழ்த்தி, ஆற்றுப்படுத்திக் கொள்ளும் வெகுசாதாரண மனோநிலையைத் தடுத்து, கனவொரு வாழ்வென அழைத்துச் செல்லும் புதிய திறப்பாக அமைகின்றது.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eAuthor: க. அம்சப்ரியா \u003c\/p\u003e\n\u003cp\u003eGenre: கவிதை\u003c\/p\u003e\n\u003cp\u003eLanguage: தமிழ்\u003c\/p\u003e\n\u003cp\u003eType: Paperback \u003c\/p\u003e\n\u003cp\u003eISBN: 9788119576210\u003c\/p\u003e","brand":"Ethir Veliyeedu","offers":[{"title":"Default Title","offer_id":45394748801178,"sku":"","price":135.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0614\/9003\/6890\/files\/KanavinIlaigal.jpg?v=1733981806"}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0614\/9003\/6890\/collections\/Amsapriya.jpg?v=1786860817","url":"https:\/\/ethirveliyeedu.com\/collections\/%e0%ae%95-%e0%ae%85%e0%ae%ae%e0%af%8d%e0%ae%9a%e0%ae%aa%e0%af%8d%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be.oembed","provider":"Ethir Veliyeedu","version":"1.0","type":"link"}