{"title":"இன்பா","description":"\u003cp\u003e\u003cimg src=\"https:\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0614\/9003\/6890\/files\/Inba.jpg?v=1786028289\" alt=\"\" width=\"141\" height=\"142\"\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eதஞ்சாவூரில் பிறந்து சிங்கப்பூரில் வசித்து வருகிறார். ஆறு கவிதைத் தொகுப்புகளும், ஒரு சிறுகதைத் தொகுப்பும், மூன்று தொகுப்பு நூல்களும் வெளிவந்துள்ளன. அயலகத் தமிழ்க் கவிதை நூலுக்கான தமிழக அரசு விருது, தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் கரிகாற்சோழன் விருது, பொதிகைத் தமிழ்ச்சங்கத்தின் கவிதை நூல் பரிசு, சிங்கப்பூர் கவிமாலையின் தங்கப்பதக்க விருது ஆகியவற்றோடு தேசியக் கலை மன்றத்தின் தங்கமுனை விருதும் பெற்றுள்ளார். 2022இல் இலக்கியப் பரிசினை இவரது லயாங் லயாங் குருவிகளின் கீச்சொலிகள் நூல் பெற்றது. 2024ஆம் ஆண்டு கடல் நாகங்கள் பொன்னி குறும்பட்டியலில் இடம்பெற்றது. தகவல் தொழில் நுட்பத் துறையில் அதிகாரியாகப் பணியாற்றும் இவர் சிங்கப்பூர்த் தமிழ்க் கவிஞர் இயக்கமான கவிமாலையின் தலைவர் மற்றும் திணைகள்.காம் தளத்தின் நிர்வாக ஆசிரியர்.\u003c\/p\u003e","products":[{"product_id":"அவகாடோவாய்-இருப்பது","title":"அவகாடோவாய் இருப்பது","description":"\u003cdiv\u003e\n\u003cdiv class=\"gmail_default\"\u003e\n\u003cdiv class=\"gmail_default\"\u003e\n\u003cdiv class=\"gmail_default\"\u003e\n\u003cdiv class=\"gmail_default\"\u003e\n\u003cdiv class=\"gmail_default\"\u003e\n\u003cdiv class=\"x14z9mp xat24cr x1lziwak x1vvkbs xtlvy1s x126k92a\"\u003e\n\u003ch2 dir=\"auto\"\u003eஒரு பெருநகரத்தை அரிக்கேன் விளக்கு வெளிச்சத்தில் கடக்கலாம்.\u003c\/h2\u003e\n\u003ch2 dir=\"auto\"\u003e\u003cbr\u003e\u003c\/h2\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003eஒரு நிலத்தில் கால் ஊன்றி காற்றில் பறக்கும் சிறுமியின் பாதங்களில் ஒட்டிக் கொண்டிருக்கும் மண்துகள்களுக்குச் சுவை அதிகமென்கிறது அதன் ருசியறிந்த நாக்கு. இன்பா அப்படியொரு ஊஞ்சலில் அமர்ந்து ஆடுகிறார். இந்திய-சிங்கப்பூர் நிலங்களில் அவரின் பாதங்கள் மாறி மாறி ஊன்றுகின்றன. கால ஊஞ்சலில் செல்லும் நிலத்துக்குச் சொற்கள் உண்மையாக இருக்கவே பரிதவிக்கின்றன. சிங்கப்பூர் நிலத்திலிருந்து வெளியே நின்று வாசிப்பவர்களுக்கு இக்கவிதைகளால் புதிய அனுபவம் கிடைக்கிறது. உள்ளிருப்பவர்களுக்கு அவர்கள் கவனித்ததையும், கவனிக்கத் தவறியதையும் சுட்டிக்காட்டுகிறது. இத்தொகுப்பை வாசித்து முடித்த பிறகு ஒரு புதிய நிலம், வாழ்க்கையை அறிந்து கொண்டார் போலத் தத்தளிப்பு மனதில் உருவாகிறது.\u003c\/div\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003e\u003cbr\u003e\u003c\/div\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003e- \u003cem\u003eஸ்டாலின் சரவணன்\u003c\/em\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003ch2 class=\"gmail_default\"\u003e\n\u003cspan\u003e\u003c\/span\u003e\u003cbr\u003e\n\u003c\/h2\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eAuthor: \u003c\/strong\u003eஇன்பா   \u003cbr\u003e\u003cbr\u003e\u003cstrong\u003eGenre\u003c\/strong\u003e: \u003cspan\u003eகவிதை\u003c\/span\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003cstrong\u003eLanguage\u003c\/strong\u003e: தமிழ்\u003cbr\u003e\u003cbr\u003e\u003cstrong\u003eType: \u003c\/strong\u003ePaperback\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eISBN\u003c\/strong\u003e: 9789348598769\u003c\/p\u003e","brand":"Ethir Veliyeedu","offers":[{"title":"Default Title","offer_id":46552248287386,"sku":null,"price":180.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0614\/9003\/6890\/files\/Avacadovaiirupathu.jpg?v=1757919420"},{"product_id":"கடல்-தாண்டிய-சொற்கள்","title":"கடல் தாண்டிய சொற்கள்","description":"\u003cdiv\u003e\n\u003cdiv class=\"gmail_default\"\u003e\n\u003cdiv class=\"gmail_default\"\u003e\n\u003cdiv class=\"gmail_default\"\u003e\n\u003cdiv class=\"gmail_default\"\u003e\n\u003cdiv class=\"gmail_default\"\u003e\n\u003cp\u003eதமிழ் நவீன கவிதை இயக்கம் என்பதே மொழிபெயர்ப்புகள் வழியாக தன் செழுமையை அடைந்ததுதான் என்று தயங்காமல் சொல்லலாம். அந்நிய மொழிக் கவிஞர்கள் நம் மொழியை, நம் பண்பாட்டை அத்தனை ஆழமாகவும் நுட்பமாகவும் என்றும் பாதித்து வருகிறார்கள். உலகம் ஒரு கிராமமாகிவிட்ட இந்த உலகமயச் சூழலில் எம்மொழியின் கவிஞரும் நமக்கு அந்நியமானவரல்ல. கவிஞர் இன்பா இந்நூலில் 25 அந்நிய மொழிக் கவிஞர்கள் மற்றும் கவிதைகள் பற்றிய அறிமுகக் குறிப்பை கொடுத்திருக்கிறார். இந்தத் தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் கவிஞர்கள் பலவகைப்பட்டவர்களாக இருப்பது இந்நூலின் தனித்துவம். உலகம் முழுதும் பல்வேறு சிந்தனைப் பள்ளிகளைச் சேர்ந்த கவிஞர்களின் குறிப்புகள் இவை. கவிகளின் உலகம் பிரத்யேகமானது. நுண்மையான அவர்களின் அகச் சலனங்களை, கவிதை எனும் விநோத உயிரியை அவர்கள் எப்படிக் கையாள்கிறார்கள், இவ்வுலகோடு அவர்கள் எப்படி தொடர்புறுகிறார்கள் என்ற இயங்கியலை இன்பா நுட்பமாகத் தொட்டுக்காட்டுகிறார். ஒரு கவியைப் புரிந்துகொள்வது அல்லது ஏற்றுக்கொள்வது என்பது ஒரு விஷயமே அல்ல. ஒரு கவி நம்மிடம் எதிர்ப்பார்ப்பதும் அதுவல்ல. ஒரு கவி தன் சூழலுக்குள் எப்படி எதிர்வினை செய்கிறான் என்பதை அவதானிப்பதுதான் முக்கியம். அந்த அவதானம் புரிதலை அல்லது ஏற்பதைத் தரலாம். தராமலும் போகலாம். ஆனால், அவன் எதிர்வினைதான் அவனின் இருப்புக்கான ஆதாரம். அந்த அளவிலேயே கவியின் இருப்பு ஒரு சமூகத்தில் நிகழ்கிறது. இன்பா இக்கவிகளின் இருப்பினது உள்ளார்ந்த பொருண்மையை சுட்டிக் காட்டுகிறார். அதுவே இத்தொகுப்பை குறிப்பிடத்தகுந்ததாக்குகிறது.\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cem\u003eஇளங்கோ கிருஷ்ணன்\u003c\/em\u003e\u003c\/p\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eAuthor: \u003c\/strong\u003eஇன்பா \u003cstrong\u003e\u003cbr\u003e\u003c\/strong\u003e\u003cbr\u003e\u003cstrong\u003eGenre\u003c\/strong\u003e: \u003cspan\u003eஅபுனைவு \/ கட்டுரைகள் \u003cbr\u003e\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cstrong\u003eLanguage\u003c\/strong\u003e: தமிழ்\u003cbr\u003e\u003cbr\u003e\u003cstrong\u003eType: \u003c\/strong\u003ePaperback\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eISBN\u003c\/strong\u003e: 9789348598561\u003c\/p\u003e","brand":"Ethir Veliyeedu","offers":[{"title":"Default Title","offer_id":46758860423322,"sku":null,"price":288.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0614\/9003\/6890\/files\/KadalThaandiyaSorkal.jpg?v=1762850236"},{"product_id":"ஒரு-மேகம்-வரைந்து-தருவாயா","title":"ஒரு மேகம் வரைந்து தருவாயா?   (இளையோருக்கான கதைகள்)","description":"\u003cdiv class=\"x14z9mp xat24cr x1lziwak x1vvkbs xtlvy1s x126k92a\"\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003e\n\u003cdiv class=\"x14z9mp xat24cr x1lziwak x1vvkbs xtlvy1s x126k92a\"\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003e\n\u003cdiv class=\"gmail_default\"\u003e\n\u003cdiv class=\"gmail_default\"\u003e\n\u003cdiv\u003e\n\u003cdiv class=\"gmail_default\"\u003e\n\u003cp\u003eகுழந்தைகளுக்கான கதைகளும் பெரியவர்களுக்கான கதைகளும் ஏராளம் வருகின்றன. ஆனால், இவற்றிற்கு இடைப்பட்ட இளையோருக்கான கதைகள் மிகச் சொற்பமாகவே எழுதப்படுகின்றன. உடலும் மனமும் உற்சாகமாக இருக்கும் இப்பருவத்தில்தான் கதைகள் வழியே உரையாட வேண்டியது அவசியம். ஏனெனில், இப்பருவத்தில்தான் தனியே நடக்கப் பழகுவர்; தனியே சிந்திக்கப் பழகுவர். அப்போது வழித்துணையாகவும் சிந்தனைத் துணையாகவும் கதைகள் தேவைப்படும். அந்தப் பணியைச் சிறப்பாகச் செய்கின்றன இந்நூலின் கதைகள். அந்த வகையில் எழுத்தாளர் இன்பாவின் முயற்சி பாராட்டத்தக்கது.\u003c\/p\u003e\n\u003cp\u003eஎதிர்கொள்ளும் சில அனுபவங்களின் வழியே கண்டடையும் புரிதல்களுக்கு நம் வாழ்வில் நீண்ட ஆயுள் உண்டு. அவ்விதமான அனுபவங்களால் விளைந்த கதைகளின் தொகுப்பு இது. கவித்துவத்தை நெருங்கிப் புரியவைக்கும் ஒரு கதை, சந்தையின் அசல் முகத்தைக் காட்டும் இன்னொரு கதை, மலைப் பயணத்தின் திசையை மாற்றியமைக்கும் மற்றொரு கதை, கடல் அலையை வாசிப்போர் மீது தெளிக்கும் ஒரு கதை என, ஒவ்வொரு கதை முடிந்தும் சிந்தனை வழியே தொடர வைக்கும் ஆற்றல் கொண்டவை. \u003c\/p\u003e\n\u003cp\u003eகவித்துவமும் வாழ்வனுபவமும் இணைந்தோடும் கதைகள். விதவிதமான காட்சிகள். அவற்றில் உலாவும் விதவிதமான மனிதர்கள். இவற்றை எந்தக் கோணத்தில் இருந்து விவரித்தால் Gen Z ன் தொடக்க வயதினருக்கான கதைகளாக மாறும் என்கிற லாவகம் இன்பாவுக்கு இயல்பாகச் சாத்தியப்பட்டிருக்கிறது. இளையோருக்கு நிச்சயம் புதிய வாசிப்பனுபவத்தை அளிக்கும்.\u003c\/p\u003e\n\u003cp\u003e - விஷ்ணுபுரம் சரவணன்\u003c\/p\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\n\u003cdiv class=\"gmail_default\"\u003e\n\u003cspan\u003e\u003c\/span\u003e\u003cbr\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003cp\u003eAuthor: இன்பா \u003c\/p\u003e\n\u003cp\u003eGenre: இளையோருக்கான கதைகள் \u003c\/p\u003e\n\u003cp\u003eLanguage: தமிழ்\u003c\/p\u003e\n\u003cp\u003eType: Paperback\u003c\/p\u003e\n\u003cp\u003eISBN: \u003cspan\u003e9789375779629\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Ethir Veliyeedu","offers":[{"title":"Default Title","offer_id":47952964419738,"sku":null,"price":180.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0614\/9003\/6890\/files\/ORUMEKAMFront.jpg?v=1777727252"}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0614\/9003\/6890\/collections\/Inba.jpg?v=1786028352","url":"https:\/\/ethirveliyeedu.com\/collections\/%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be.oembed","provider":"Ethir Veliyeedu","version":"1.0","type":"link"}